Header Ads



தலங்கமயில் 3 பேர் பலி - காரணம் இதுதானா..?

கொஸ்வத்தை - தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமே பலியாகியுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலியான ஆண் புனிதத் தளம் ஒன்றில் பணிபுரிபவராகும். அவரிடம் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்ற வேளை, முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பின்னர், இது தொடர்பில் முறையிட குறித்த பெண் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். இந்தநிலையில், அங்கு வந்த அந்த ஆண் நபர் கைக்குண்டை வெடிக்க வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில், சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பெண்ணின் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் இதன்போது தாய் பலியாகியுள்ள நிலையில், காயமடைந்த சிறுமி வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

1 comment:

Powered by Blogger.