Header Ads



வீரர் வசீம் தாஜுதீனின் கொலை - 2 பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான பொலிஸ் அதிகாரிகள் இருவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கொலை தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸின் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு விசாரணையின்போதே, நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

No comments

Powered by Blogger.