Header Ads



கடந்த வருடத்தில் பிறப்புகள் 3,34821 - இறப்புகள் 1,31614 - திருமணங்கள் 1, 75939


கடந்த வருடத்தில் 6 லட்சத்து 42 ஆயிரத்து 374 (6, 42, 374) பிறப்பு இறப்பு, விவாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், அவற்றுள் பிறப்புகள் 3 லட்சத்து 34 ஆயிரத்து 821 ( 3, 34, 821) எனவும், இறப்புகள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 614 (1, 31, 614) எனவும் விவாகங்கள் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 939 (1, 75, 939) எனவும் பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவிக்கின்றது.

வைத்தியசாலைகளில் இடம்பெற்ற பிறப்பு, இறப்புகள் பிராந்திய விவாகப் பதிவாளர்களால் பதியப்பட்ட விவாகங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் பெறப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் ஈ.எம். குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் நடந்த இலங்கையர்களின் பிறப்புகள் 8, 893, இறப்புகள் 470, விவாகங்கள் 230 ஆகியவையும் 11 லட்சம் காணி உறுதிப்பத்திரங்களும் தனது திணைக்களத்தில் பதியப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது திணைக்களத்துக்கு நாடு முழுவதிலும் 45 கிளைக் காரியாலயங்கள் இருப்பதாகவும் மொத்தமாக 1200 பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.