Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், 331 பேருக்கு தடை

-ADT-

அம்பாறை - ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்கள் 331 பேருக்கு, அப் பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. 

புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்த மாட்டோம் என, ஏனைய பீடங்களிலுள்ள அனைத்து மாணவர்களும் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், முகாமைத்துவத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மாத்திரம் அதற்கு இணங்கவில்லை என, அப் பல்கலைக்க மாணவர் சேவைகள் பணிப்பாளர் பேராசிரியர் ரமேஷ் அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து, பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள் மீண்டும் தெரியப்படுத்தும் வரை அவர்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி முகாமைத்துவப் பீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் 214 பேர், தமிழ் மாணவர்கள் 97 பேர் மற்றும் 20 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும், பகிடிவதை எனக் கூறி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி நிர்வாகிகளால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அப் பல்கலைக்கழகத்தின் மாணவ பிரதிநிதிகள் தெரித்தனர். 

9 comments:

  1. இந்த 331 பேரும் மாணவர்களா? மாடுகளா?

    ReplyDelete
  2. வாக்குறுதி அளிக்காதவரை இவர்கள் மீதான தடையை நீக்கக் கூடாது. மேலும் 20 முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாத்தையும் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. No boss ellarum appidi illa kooddathoda govinda

      Delete
  3. what is wrong with these students and why do not follow the right path and if all other departments agree why can not these idiots agree.. you do not see this inhuman practice anywhere in the world except in Sl today.. let all other university follow SEUSL in this good example.

    ReplyDelete
  4. There are some stupit staff guide the student against VC

    ReplyDelete
  5. It is most terrible and heinous crime done by so called intelligent people in the name of ragging.It should be stopped at any cost.Because of ragging vast number of student Some physically and mentally affected and left university education prematurely.When we consider the activities of parliamentarian,specialist doctors corporate boss and university student we have to think weather we are real human.So it is the place this people turned into inhuman is University and ragging.So this ragging should be criminalize and bring in laws to punish those involved.

    ReplyDelete
  6. முதலில் பகடி வதை என்பது இது தான் ( எவ்வகையான நடவடிக்கைள் ) என அடையாளம் காணப்படல் வேண்டும். அவை மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். ஒரு மாணவரோ, மாணவர் குழுவோ இன்னொரு மாணவரையோ மாணவர் குழுவையோ உள ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ நோவினை செய்தால் அதட்கான ஒழுங்கு நடவெடிக்கையை பல்கலை கழக நிருவாகம் மேட்கொள்ளுவது நடைமுறையில் உள்ள விடயம். மேற்குறிப்பிட்ட செய்தி ஒரு முழு விளக்கத்துடன் இல்லாவிட்டாலும் பகடி வதை செய்ய மாட்டோம் என வாக்குறுதி வழங்கும் ஒரு முறை எங்களது பார்வையில் புதிய விடயமாகவே (strange ) உள்ளது. பல்கலை கழகம் ஒரு நெருக்கடி நிறைந்த இடமாக இருப்பது மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை ஆற்றலையும், தன்னம்பிக்கையையும், ஆளுமையையும் மழுங்கடிக்கச் செய்யும் என்பது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். பல்கலை கழக மாணவர் சமாச்சாரத்தில் வரும் பிரச்சினைகளை மாணவர் சங்கத்தின் ( student council ) மூலம் தீர்த்துக் கொள்வதே மிகவும் ஆரோக்கியமான சூழ் நிலையாகும். மாணவர்கள் விடயத்தை batch ரீதியாக கையாள்வதை விட தனித்தனி நபராகவே கையாளுதல் வேண்டும். அப்போது தான் அங்கு நிர்வாகிகளின் கை ஓங்கும் என்பது எமது தாழ்மையான கருத்தாகும். மாணவர்களுக்கு அடிப்படை உரிமை என்ற விடயம் உள்ளது என்பதை நிர்வாகம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கவனத்தில் கொள்வது நன்றாக இருக்கும். தென்கிழக்கு பல்கலை கழகம் ஒரு இன ரீதியாக இயங்கும் பல்கலை கழகம் என்ற பெயர் வராமல் ஒரு தேசிய பல்கலை கழகமாக இயங்க வேண்டும் என்பதில் மாணவர்களும் சரி நிர்வாகமும் சரி பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறோம். மாணவர்கள் தங்களது கல்விநடவெடிக்கையில் பாதிப்பு வராத வகையில் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

    ReplyDelete
  7. இந்த 331ம் நிச்சயமாக மாடுகள்தான், எருமை மாடுகள்! கடுமையாகத்
    தண்டிக்கப் படவேண்டியவர்கள்.

    ReplyDelete
  8. Appa ragging management ku nadakkallana solla varinga ?😉😉

    ReplyDelete

Powered by Blogger.