Header Ads



அலவி மௌனாவின் ஜனாஸா நாளை 3.30 மணிக்கு தெஹிவளையில் நல்லடக்கம்


-அஷ்ரப் ஏ சமத்-

மேல் மாகாண ஆளுனராக 13 வருடங்களும் கபிணட் அமைச்சராக. பிரதியமைச்சராகவும்  முத்த தொழிற்சங்கவாதியும் ஸ்ரீ.ல.சு கட்சியில் உப தலைவருமாக பதவி வகித்த அலவி மொளலான இன்று பி.பகல் 6.00 மணியளவில் தணியாா் வைத்தியசாலையில் காலமானாா்.

இவரது ஜனாசா தற்பொழுது தெஹிவளை - மல்வத்தையில் உள்ள உள் வீதியில் உள்ள் 6 இல வீட்டில்  வைக்கப்பட்டுள்ளது.  9 மணியில் இருந்து சகல இன மக்களும் அரசியல் வாதிகள் தொழிற்சங்க வாதிகள் ஜனாசாவை பாா்வையிட்டு வருகின்றனா்.  நாளை (17)  வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தெஹிவளை ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென நக்கீப் மொலானா தெரிவித்தாா். 

No comments

Powered by Blogger.