Header Ads



அல் குர்ஆன் படித்தால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்


இந்தோனேசியாவில் அரசுக்கு சொந்தமான பெர்டா மினா என்ற எண்ணெய் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது புனித ரமலான் மாதத்தில் குர்ஆன் படிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக போஸ்டர் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது.

எனவே, தலைநகர் ஜகார்தாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஏராளமான வாகன ஓட்டிகள் நீண்ட கியூ வரிசையில் நிற்கின்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை அறைக்கு சென்று புனித குர்ஆன் புத்தகத்தில் ஒரு பகுதியை படித்து விட்டு 2 லிட்டர் பெட்ரோல் போட்டு செல்கின்றனர்.

ரமலான் மாதம் முழுவதும் குர்ஆன் வாசிப்பதன் மூலம் முழு நூலையும் படித்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் வாகனங்களில் இலவசமாக பெட்ரோல் நிரப்ப முடிகிறது என்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 25 கோடி மக்கள் தொகையுள்ள இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.

5 comments:

  1. இந்தோனேசியா முதலில் பௌத்த நாடாக இருந்தது. பௌத்தர்களுக்கு சரியான கடவுள் கொள்கை கிடையாது. பல பௌத்தர்கள் இந்துக் கடவுள்களையும் வணங்குவார்கள். சரியான முறையில் முயற்சி செய்தால் இலங்கையும் இன்சா அல்லாஹ் பெரும்பாண்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடாக மாறும்.

    ReplyDelete
  2. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஓதுவதாயின் ஏற்றுக்கொள்ளலாம். பெற்றோலுக்காக குர்ஆன் ஓதுவது அதன் வசனங்களை விற்பதற்கு சமம்.

    ReplyDelete
  3. மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
    (அல்குர்ஆன் : 3:199)

    ReplyDelete
  4. நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
    (அல்குர்ஆன் : 5:44)

    ReplyDelete

Powered by Blogger.