தம்மாலோக தேரருக்கு, ரூபா 2 கோடி சரீர பிணை
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக, யானைக் குட்டிகளை தன் வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் உடுவே தம்மாலோக தேரருக்கு, கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்று (20) குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், சட்ட மாஅதிபரினால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், தான் நிரபராதி என, தேரர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், ரூபா 100 இலட்சம் (ரூபா ஒரு கோடி) கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Headline is 2 Crore but detailed news is 1 Crore which is correct??? Moreover many spelling mistakes nowa days. Whats going on?
ReplyDeleteSpelling mistakes comes because of Tamil to English converter. So don't mind too much.
ReplyDelete