இலங்கை அமைச்சர்கள், பிரித்தானியாவில் தீவிர பிரச்சாரம்
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கருத்து கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பில்அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூனுக்கு உதவுவதற்காக இலங்கையில் இருந்து நான்குஅமைச்சர்கள் பிரித்தானியா சென்றுள்ள நிலையில் பிரித்தானிய அரசின்வேண்டுகோளுக்கு அமையவே தாம் அங்கு சென்றுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர்தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதற்கமையவேவெளிநாட்டமைச்சின் ஒருங்கிணைப்புடன் தாம் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பிரதமர்டேவிட் கமரூனை சந்தித்த பொழுது இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாகவும்அமைச்சர் தயாசிறி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கருத்துக்கணிப்பு தொடர்பாக அங்குள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்களை தெளிவுபடுத்தும் முகமாக பிரித்தானியஅரசானது ஆசிய நாடுகளிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே தாமும், இந்தியப்பிரதிநிதிகளும் பிரித்தானியா நோக்கி சென்றுள்ளதாக அமைச்சர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவுக்கு அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, ஹரின்பெர்ணான்டோ, ஹர்ச டி சில்வா ,டிலான் பெரேரா மற்றும் ரோசி சேனநாயக்கஉள்ளிட்டவர்கள் சென்றுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஏதாவது ஒரு காரணத்தினால் பிரித்தானியாவானது ஐரோப்பிய ஒன்றியத்தில்இருந்து விலகும் பட்சத்தில் இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை சந்திக்கும்எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜைகளாக உள்ள இலங்கையின் மூவினத்தைச் சேர்ந்தவர்களும்பிரித்தானியாவானது மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதைவிரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

British people decided now. I thing they don't need any one to explain how to vote. This is not Sri Lankan election. This is British election, British people know better.
ReplyDeleteSri Lankans are experts in last minute election gimmicks.
ReplyDeleteGood joke
ReplyDeletePlease take care of your own country's problems first
ReplyDelete