Header Ads



தாய் வெளிநாட்டில், சித்திரவதைக்குள்ளான 2 சிறுமிகள் மீட்பு - ஏறாவுரில் அதிர்ச்சி


-BBB-

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவுர் பிரதேசத்தில், சிற்றன்னையினால் சித்திரவதைக்குள்ளான இரு சிறுமிகள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் மீட்கப்பட்டு அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிறுமிகளின் சிற்றன்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 மற்றும் 10 வயதுடைய இந்த சிறுமிகளின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகின்றார்.

தாயின் சகோதரியின் பராமரிப்பில் இருந்த போது, சிற்றன்னை மற்றும் சில உறவினர்களினால் இரு சிறுமிகளும் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் மீட்டகப்பட்ட இந்த சிறுமிகளின் உடம்பில் சித்திரவதைக்குள்ளான தடயங்கள் காணப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

இரு சிறுமிகளும் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று தமது விசாரனைகளின் போது தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் வறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் தொகை அதிகரித்தது வருவதாக கூறப்படுகின்றது

குறிப்பாக இளம் தாய்மார்கள் உறவினர்களிடம் பிள்ளைகளை ஓப்படைத்து செல்வதால், இது போன்ற சித்திரவதை , துஷ்பிரயோகம் மற்றும் கல்வி கற்கும் உரிமை மறுப்பு போன்ற பிரச்சினைகளை சிறார்கள் சந்திப்பதாக சமூக ஆர்வலர்களினால் சுட்டிக்காட்டுகின்றனர்.

11 comments:

  1. ஈடுபட்டது கிடையாது என தெரிய வந்தது. அவளது உறவினர்கள் யாரும் அவளை மீட்க முன்வராததால் பொலிசில் முறைப்பாடு செய்ய முடியவில்லை. இதற்குக் காரணம் உம்மா வெளிநாடு சென்றமையாகும். இது போல் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வறுமையை காரணம் சொல்லி வெளிநாடு செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    ReplyDelete
  2. What a sad reality. Unfortunately in our parliament they pass finance approval for MP vehicle and there benifits.
    There is no plane for this inacen kids. What they don wrong?

    ReplyDelete
  3. (page 01) பெண்கள் வெளிநாடு செல்வதை கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும். இதனால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தடுப்பது உலமாக்களினதும் மஸ்ஜித் நிருவாகிகளினதும் பொறுப்பாகும். இதற்காக ஜும்மா மிம்பர் பயன்படுத்தப்பட வேண்டும். எனக்கு எந்த ஜும்மா பயானிலும் இத்தகைய விடயம் பேசப்பட்டமை ஞாபகம் இல்லை. தாய் வெளிநாடு சென்றமையால் ஏற்பட்ட மோசமான சம்பவ மொன்றை உங்களிடம் பகிர்கிறேன். இது

    ReplyDelete
  4. எடுத்த எடுப்பில் வெளிநாடு செல்வது தடை செய்யப்ப வேண்டும் எ கூறும் மேதாவிகளே!
    வருமை எதனையும் செய்ய தூன்டும் வெளிநாட்டை தடை செய்தால் பிச்சை வியாபாரம் செழித்தோங்கும்,
    விபச்சாரம் பெருகும்,
    களவு, தற்கொலைகள் பெருகும்.
    இதற்குத்தானே ஆசைப்படுகிறீர்கள்.
    எந்த பென்னும் விரும்பி வெளிநாடு செல்வதில்லை வருமையின் தூன்டுதல்.
    இதற்கான தீர்வுகளை ஏற்படுத்தி விட்டு குறைகூறுங்கள்.
    இஸ்லாத்தில் உள்ள தீர்வையாவது குத்பாக்கள் மூலம் ஊக்கப்படுத்த பாருங்க ள்.
    நடைமுறையில் இஸ்லாம் தூரமானதன் விளைவுகளே இவை.
    (ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது)

    ReplyDelete
  5. Siyath! சரியான பதில். பள்ளிக்கு மாதாந்த
    சந்தா கொடுக்கவே யோசிப்பவர்கள். தனக்கு வந்தால் தெரியும்.

    ReplyDelete
  6. குத்பாக்களில் சமூகத்தில் தற்போது உள்ள பிரச்சினைகளை பேசுவதுதான் சிறந்தது மாறாக மார்கத்தில் உள்ள மாற்றுக்கருத்துக்களை மட்டும் அல்ல. அந்தந்த ஊர் பள்ளிவாயல்கள் பெண்கள் வெளிநாடு செல்வதை தடுக்க எவ்வளவோ செய்ய முடியும் ஆனால் இன்று பள்ளிவாயல்களை எந்த மார்க்க பிரிவினர்கள் கைபற்றுவதிலேயே சண்டை பிடித்துக்கொண்டிருக்கின்ரர்கள்.

    சமூகத்தில் உள்ள அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளை தீர்பதற்கு இஸ்லாத்தில் சொல்லப்பட்ட முறையில் முயற்சி செய்தாலே, வறுமை, சீதனக் கொடுமை, ஆதரவற்ற சிறார்களின் நலன் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

    இதை செய்வார்கள?

    ReplyDelete
  7. Jaffna muslim எனது (page 02) comment ஜ ஏன் போடவில்லை?

    ReplyDelete
  8. Br. Siyath Mohammed
    நீங்கள் சொன்ன காரணங்கள் சரியாக இருக்கலாம். நான் சொன்னது பிழையாக இருக்கலாம். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். ஆனால் இதற்குத்தான் ஆசைப்படுகிறீர்கள் என்று கூறி இருந்தீர்கள். இதை எவ்வாறு அறிந்து கொண்டீர்கள். நீங்கள் எனது உள்ளத்தை திறந்து பார்த்தீர்களா? comment பண்ணும்போது கவனமாக அனுப்பவேண்டும். எனது ஆசை பெண்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படும் பாவங்களும் விபரீதங்களும் குறைய வேண்டும் என்பதே.

    ReplyDelete
  9. இந்த பிள்ளை களின் தந்தை எங்கே. அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும் அவருக்கும் பிள்ளை மீது ஒரு கடமையுண்டு.அதை செய்ய தவறியதற்காக அவரும் கைது செய்யப்படாமல் வேண்டும்

    ReplyDelete
  10. இதற்கு 100 வீதம் பொறுப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தான். இவர்களது கடமை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்பவர்களின் குடுப்பங'களினை கண்காணிப்பதாகும். இவர்களின் அனுமதி இல்லாமல் எவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்ல முடியாது. சில அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்று சில தவறுகள் செய்வதாக பரவலாக பேசப்படுகின்றது

    ReplyDelete

Powered by Blogger.