Header Ads



2020ம் ஆண்டளவில் இலங்கைக்கு, சொந்தமாகவுள்ள 23 மடங்கு கடற்பரப்பு


இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான மேலும் ஒரு கடல் பகுதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு தற்போது சொந்தமாக உள்ள கடல் பரப்பு இலங்கையை போன்று 60 மடங்கு பெரியவை.

எதிர்காலத்தில் மேலும் 23 மடங்கு கடற்பரப்பு இலங்கைக்கு சொந்தமாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தொடர்புடைய பல நிறுவனங்களுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இலங்கைக்கு பொருளாதார ரீதியில் மேலும் முக்கிய கடல் பகுதிகள் கிடைக்கவுள்ள நிலையில் இது தொடர்பில் கடற்படையினரால் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் இரு வருடங்களுக்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.