2017ஆம் ஆண்டில், 24 நாட்களே பொது விடுமுறைத் தினங்கள் (விபரம் உள்ளே)
-Tm-
2017ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு, வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டில், 24 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வருடம் ஒன்றுக்கு பொது விடுமுறை நாட்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஏற்கெனவே கருத்து வெளியிட்டிருந்தனர்.
ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13 நாட்களும் ஜப்பானில் 17 நாட்களும், இந்தோனேஷியாவில் 19 நாட்களும், தாய்லாந்தில் 20 நாட்களும் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாகக் காணப்படுகின்றன. அத்துடன், அமெரிக்காவில் 09 நாட்களும் அவுஸ்திரேலியாவில் 10 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் தேவையான போயாக்கள் தமிழ் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 14 பொதுவாஎல்லோருக்கும் அல்லது சிங்கள தமிழர்களுக்கு மட்டும் நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் முஸ்லிகளுக்கு மட்டும் சிவராத்திரி தீபாவழி தமிழர்களுக்கு மட்டும் பெரிய வெள்ளி கிறிஸ்மஸ் கிறுஸ்தவர்களுக்கு மட்டும் மே தினம் பொதுவாக எல்லோருக்கும் போசன் போய சிங்களவர்களுக்கு மட்டும் இவ்வாறு கொண்டு வந்தால் நாடு சீராகும்
ReplyDelete