12 பேரை கொன்ற யானை பிடிபட்டது - ஹொரவபத்தானயில் தடுத்துவைப்பு
12 நபர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த காட்டு யானையை, வெல்லவாய பலஹருவ தேவகிரிகந்த பிரதேசத்தில் வைத்து வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
அம்பேகமுவ, பலஹருவ, உணகந்த, வெஹேரயாய, எதிலிவௌ, சிறிபுர ஆகிய பிரதேசங்களில் மனிதர்களின் உயிரை பறித்து, சொத்துகளுக்கு சேதம் விளைவித்து வந்த இந்த காட்டுயானை, மிக சிரமத்துக்கு மத்தியில் பிடிக்கப்பட்டுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சின் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பிடிக்கப்பட்ட காட்டு யானை, ஹொரவபத்தான யானைகள் தடுப்பு மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Post a Comment