Header Ads



10 வருடத்தில் மதுவரி வருமானமாக 507.705 மில்லியன் ரூபா - அரசாங்கம் பெருமிதம்

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 513 மில்லியன் லீற்றர் லிக்கரும் 845 மில்லியன் லீற்றர் பியரும் உற்பத்தி செய்யப்பட்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

லிக்கர் மற்றும் பியர் உற்பத்தி மூலம் மதுவரி வருமானமாக 507.705 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்று வாய்மூல விடைக்கான வினாவின் போது , பந்துல குணவர்த்தன எம்.பி.யின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிதி அமைச்சர் மேலும் கூறுகையில்,

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட லிக்கர் முறையே 38 மில்லியன், 45 மில்லியன், 50 மில்லியன், 46 மில்லியன், 41 மில்லியன், 49 மில்லியன், 54 மில்லியன், 50 மில்லியன், 44 மில்லியன்,44 மில்லியன், 59 மில்லியன் என 543 மில்லியன் லீற்றர்களாகும்.

அதேபோன்று பியரை எடுத்துக் கொண்டால் 51 மில்லியன், 47 மில்லியன், 50மில்லியன், 58மில்லியன், 50மில்லியன், 66மில்லியன், 87மில்லியன், 100மில்லியன், 120மில்லியன், 125மில்லியன், 126மில்லியன் என 845 மில்லியன் லீற்றர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் 2005 ஆம் ஆண்டுக்கான லிக்கர் மற்றும் பியர் மதுவரி வருமானமாக 16.321 மில்லியன் ரூபாவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே 20520 மில்லியன், 23829 மில்லியன், 27010 மில்லியன், 28321 மில்லியன் 37853 மில்லியன், 55881 மில்லியன், 59840 மில்லியன், 62552 மில்லியன், 69926 மில்லியன், 105350 மில்லியன் ரூபாய்கள் என பத்தாண்டுகளில் மொத்தமாக 507705 மில்லியன் ரூபாய்களும் பெறப்பட்டுள்ளன என்றார்.

4 comments:

  1. Stupid JM reporters, why are you publishing this picture in this way and do you think it will not create any issues. It might offend the people who respect that.

    ReplyDelete
  2. 507.705 Million or 507705 Million???
    I doubt whether you guyz doing this jobs with a kid...
    Don't forget that you guyz are publishing news.

    ReplyDelete
  3. Admin please remove this pic.

    ReplyDelete
  4. இவ்வாறான படங்களைப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.