UNP குள் குழப்பத்தை ஏற்படுத்த, மஹிந்த தரப்பினர் முயற்சி
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கும் எதிராக கட்சியின் உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், கட்சிக்குள் இவ்வாறான முரண்பாடுகள் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட உறுப்பினர்கள் இணைந்து செயற்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பாராளுமன்ற அமர்வுகளில் குழப்பம் விளைவிக்க கூட்டு எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment