Header Ads



கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கப்பாருக்கு எதிராக, SLTJ வழக்குத் தாக்கல்

கடந்த 19.02.2016ம் திகதி வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது SLTJயினரின் பள்ளிவாசலுக்குள் திடீரென்று அத்துமீறி பிரவேசித்து தொழுகையிலும், மார்கக் விளக்க நிகழ்ச்சியிலும் பங்கு பற்றிக்கொண்டிருந்த உறுப்பினர்களை கையாலும் காலாலும் அடித்து, உதைத்து கலைத்து பள்ளிவாசலுக்குரிய ஒலிபெருக்கிகளையும் அபகரித்துச் சென்ற கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. கப்பாருக்கு எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் அங்கத்தவர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்ற 2016.02.19ம் திகதி சாய்ந்தமருது SLTJ கிளை பள்ளிவாசலில் இஸ்லாமிய கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கான சகல அறிவித்தல்களையும் சமூகவலைத்தளங்கள், சுவரொட்டிகள், குறுஞ்செய்திகள் ஊடாக மக்களுக்கு அறிவிக்கப் பட்டிருந்தது. இவைகளை நன்கு அறிந்து கொண்ட கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்க மாற்றுக் கருத்துள்ள அமைப்பினருடன் கைலாகு செய்து கொண்டு திடீரென்று எமது பள்ளிவாசலுக்குள் அத்துமீறி பிரவேசித்து சப்பாத்து காலுடன் வணக்கத் தளத்திற்குள் நுழைந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உறுப்பினர்களையும், மார்க்க விளக்க நிகழ்வில் பங்குபற்றியிருந்த உறுப்பினர்களையும் பயம் காட்டி அடித்து கலைத்து அவர்களின் பெறுமதியான பொருட்களையும் எடுத்துச் சென்றிருந்தார். அதே நேரம் திரு. கப்பாருடன் வந்திருந்த மாற்று மத பொலீஸார் சிலர் ”தொழுமிடத்திற்குள் சப்பாத்து காலுடன் உள்நுழைய வேண்டாம் என கூறவும் அவர்கள் மன்னிப்பு கேட்டு விலகிச் சென்றார்கள்”  என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன் எமது அமைப்பினர் பொலீஸில் செய்த புகாரைக் கூட பாரம் எடுக்காமல் திருப்பி  அனுப்பப்பட்டுள்ளனர். பொலீஸ் உயர்பீடங்களுக்கு குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. ஆகையால் இப்பொலீஸ் உத்தியோகத்தரின் கடமைக்குப் புறம்பான செயல்கள் குறித்து எமது  தலைமைபீடம் கலந்தாலோசித்து குறிப்பிட்ட பொலீஸ் நிலையை பொறுப்பதிகாரியான திரு. குப்பாருக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை எடுத்து முடித்துள்ளதுடன் 2016.04.26ம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தனியான பிராதுகள் மூலம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை எதிர்வரும் 2016.05.24ம் திகதி எதிராளியை அழைத்து விசாரிப்பதாகவும் மன்று தெரிவித்துள்ளது.

மேலும் எமது அமைப்பு நாட்டு சட்டம், நீதி, தர்மம், போன்றவற்றை மதித்து நடக்கும் அமைப்பாகும். ஆனாலும் கப்பார் என்கிற குறிப்பிட்ட பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி இப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் அதாவது மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேசங்களில் நமது ஜமாஅத்திற்கு எதிராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொய்யான வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பல இடைஞ்சல்களை தொடர்ந்தும் செய்து வருகின்றார். அதுமட்டுமின்றி கடந்த 19ம் திகதிய சம்பவத்தின் போது பொலீஸ் உத்தியோகத்தரே மார்க்க சொற்பொழிவை கேட்டுக் கொண்டிருந்த மக்களை பீதிக்குட்படுத்தி விட்டு: சட்டவிரோத கூட்டம் கூடியமை, ஆத்திரமூட்டும் வகையில் பேசி கழகத்தை தூண்டியமை போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்து சம்பவத்தில் ஈடுபட்டாதாகக் கருதப்படும் உறுப்பினர்களை நீதிமன்றம் எதிராளிகளின் பெயர்ப் பட்டியலை  கோரியிருந்தும் கூட  திரு. கப்பார் அதிகாரத்தை  சட்டவிரோதமான முறையில் கைய்யில் எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தின் கோரிக்கையைக் கூட செவி சாய்க்காமல் ஜமாஅத்தின் உறுப்பினர்களையும், பொதுமக்களையும் வீடுவீடாக சென்று தேடிப்பிடிப்பதில் சிரத்தையாக இருக்கிறார்.  அங்கத்தவர்களை முறையற்ற விதத்தில் கைது செய்து தனது குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக இந்நடவடிக்கையை இவர் அறங்கேற்றி வருவது நல்லாட்சி நடத்துவதாக கூறும் இவ்வரசின் பெயரை கெடுக்கும் நடவடிக்கையாகும்.

No comments

Powered by Blogger.