Header Ads



முஸ்­லிம்­களின் பழக்க வழக்­கங்கள் பற்றி, பௌத்த தேரர் ரணிலிடம் விளக்கம்கோரல்

-விடிவெள்ளி ஏ.ஆர்.ஏ. பரீல்-

இன­வாதம் மற்றும் மத­வாதம் தொடர்­பான கருத்­துக்­களை வெளி­யி­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென கருத்து  தெரி­விக்கும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க “இன­வாதம்” என்ற சொல்லின் வரை­வி­லக்­க­ணத்­தையும் அதன் எல்­லை­யையும் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஹேகொட விபஸ்சி தேரர் கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

தரம் 11 இற்­கான சிங்­கள மொழியும் இலக்­கி­யமும் எனும் பாட­நூலில் முஸ்­லிம்­களின் பழக்க வழக்­கங்கள் பற்­றியும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சிங்­கள மொழியும் இலக்­கி­யமும் பாட­நூலில் இவ்­வா­றான விப­ரங்கள் சேர்க்­கப்­பட முடி­யாது. இது  எவ்­வாறு உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்கும் அவர் பிர­த­ம­ரிடம் விளக்கம் கோரி­யுள்ளார்.

ஹேகொட விபஸ்சி தேரர் தான் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­துக்கு இது­வரை பதில் கிடைக்­கா­ததால் மீண்டும் அந்தக் கடி­தத்தை பிர­த­ம­ரிடம் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக சிங்­கள ஊட­க­மொன்­றுக்கு தெரி­வித்­துள்ளார்.

ஹேகொட விபஸ்சி தேரர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இன­வாதம், மத­வாதம் பேச­வேண்டாம் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்­துள்ளார். இன­வா­தத்தை தோற்­று­விக்க வேண்டாம் எனக் கூறி­யுள்ளார்.

பௌத்த குரு­மார்கள் நாம் இன­வாதம், மத­வாதம் பேசு­வ­தில்லை. தூண்­டு­வ­தில்லை. நாம் இவ்­வா­றான இன­வாத கருத்­துக்­களை எழு­து­வ­து­மில்லை. எமது உரைகள் மக்­களை தர்­மத்­தின்பால் ஈர்ப்­ப­தா­கவே அமையும். எமது உரை­களில் பௌத்த தர்மம், வர­லாறு, வர­லாற்று பின்­ன­ணிகள் பற்­றியே தெரி­விக்­கின்றோம். அநு­ரா­த­புர யுகம், பொலன்­ன­றுவை யுகம் அதன் பின்­னைய வர­லா­று­க­ளையே மக்­க­ளுக்கு போதிக்­கின்றோம்.

நாட்டின் பௌத்த சூழல் மற்றும் எமது வர­லாறு அழிக்­கப்­ப­டு­வது தொல்­பொருள் பிர­தே­சங்­களின் ஆக்­கி­ர­மிப்பு பற்றிக் கூறு­கிறோம். இவற்றைப் பற்றி நாம் பேசினால் பிர­தமர் கூறும் “இன­வாதம்” எனும் குற்றச் சாட்டில் நாமும் கைது செய்­யப்­ப­டலாம். அத­னாலே “இன­வாதம்” என்­ப­தற்­கான வரை­வி­லக்­க­ணத்­தையும் அதன் எல்­லை­யையும் கோரி­யுள்ளோம்.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் என்போர் சமஷ்டி ஆட்­சி­மு­றையை கோரி நிற்­கி­றார்கள். இதுவே இன­வா­தத்தைத் தூண்டும் செயல் நாட்டை இரண்­டாகப் பிரிப்­ப­தற்­கான முயற்சி இது எமது அர­சியல் யாப்­புக்கும் முர­ணா­ன­தாகும்.

எமது வர­லாற்று உரி­மை­க­ளையும் பௌத்த மத உரி­மை­க­ளையும் பற்றி பேசு­வதை நிறுத்­து­வ­தற்­கா­கவே “இன­வாதம்” என்ற சொல்லை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பாவிக்­கிறார். எமது தொல்­பொருள் வரலாற்றுப் பிரதேசங்கள் பற்றி பேசும் போது அது இனவாதமாகக் கருதப்படுகிறது. ஒரு பிரிவினர் நாட்டைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் போது சிங்களவர்கள் இதற்கெதிராக குரல் கொடுத்தால் அது இனவாதமா? ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்த வேண்டும் என்று வேண்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.