Header Ads



புத்தளம் மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு, SLTJ நிறைவேற்றியுள்ள 5 முக்கிய தீர்மானங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு நேற்றைய தினம் (01.05.2016) புத்தளம், கல்பிட்டி நகரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்ட தலைவர் சகோ. பவ்சாத் தலைமையில் நடைபெற்றது. இணைவைப்பில் மூழ்கியிருக்கும் மக்களை தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முயற்சியின் ஒரு அங்கமாக மாவட்ட ரீதியாக ஷிர்க் ஒழிப்பு மாநாடுகளை ஜமாஅத் நடத்தி வருகின்றது. நேற்று நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. கல்பிட்டி அரச வைத்திசாலை சேவைகளை துரிதப்படுத்த வேண்டும்.

கல்பிட்டியில் இயங்கி வரும் அரச மருத்துவமனையில் போதுமான சிகிச்சைகள் இல்லாமையினால் சிறு சிறு நோய்களுக்கெல்லாம் புத்தளம் பெரிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. காலடியில் அரச வைத்தியசாலை ஒன்றிருந்தும் 45 கி.மீ க்கும் அதிகமான தூரம் நோயாளிகளை கொண்டு செல்ல வேண்டியிருப்பதினால் குறித்த நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் வைத்தியசாலை பணியாளர்களும் பாரிய சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது விடயத்தில் அரசு அக்கரை செலுத்தி கல்பிட்டி அரச வைத்தியசாலையில் உள்ள குறைகளை கண்டறிந்து பணிகளை துரிதப்படுத்துமாரு இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது.

2. பல்கலைக் கழகம், கல்விக் கல்லூரி நுழைவு சம்பந்தமாக

புத்தளம் மாவட்டத்தில் க.பொ.த. ச/த மற்றும் க.பொ.த. உ/த பரீட்சைகளில் சித்தியடைந்த அதிகமான மாவணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரிகளுக்கான வாய்ப்பை இழந்த நிலையில் தொழில் வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கக் கூடிய நிலையை நாம் காண்கின்றோம். இதற்கு பிரதான காரணம் பல்கலைக் கழகம் மற்றும் கல்விக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணக்கை குறைவாக உள்ளதே ஆகும். எனவே இவர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுத்தரும் பொருட்டு புத்தளம் மாவட்டத்தில் பல்கலைகழம் மற்றும் கல்விக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3. போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

புத்தளம் மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளில் மிகப்பெரும் சவாலாக உள்ளது போதைப் பொருள் பயன்பாடாகும். இதன் காரணமாக அதிகமான வாலிபர்கள் மற்றும்  பாடசாலை சிறார்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு மூல காரணமாக உள்ள போதைப் பொருள் வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இம்மாநாடு அரசிடம் கோரிக்கை வைக்கிறது.

4. போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரம்

புத்தளம் மாவட்டத்தில் பரவலாக போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்து வருவதனால் அதை முற்றாக ஒழிக்கும் பொருட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் போதைப் பொருள் எதிர்ப்பு தீவிரப் பிரச்சாரம் இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் ஜூலை 20 முதல் 30 வரை புத்தளம் மாவட்டம் பூராக நடைபெரும் என்பதை இம்மாநாடு ஏகமானதாக தீர்மானிக்கிறது.

5. “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்“ தொடர் முலக்கப் பிரச்சாரம்

முஸ்லிம்கள் எப்படி இணைவைப்பில் மூழ்கி தங்கள் வாழ்வை அழித்துக் கொள்கிறார்களோ அதே போல் நபிகளாரின் போதனைகளை மறந்து அதற்கு எதிரான ஏராலமான காரியங்களை செய்து வருகின்றனர். அதையும் சமுதாயத்திற்கு உணர்த்தும் விதமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தொடர்ந்து "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் தொனிப் பொருளில் நாடலாவிய ரீதியில் தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப் படும் என்பதையும் இம்மாநாட்டில் தெரிவித்துக் கொள்கிறோம்.

6 comments:

  1. What is these issues to do with Shirk. In name shirk but all are social service, you are a copy cuts of all social service of all other groups. so do not say shirk eradication.. say social service works of your groups//come up with open agenda...how long you will keep doing this in the name of shirk

    ReplyDelete
  2. போதை பொருலை முற்றாக ஒலிப்பதற்கு கலமிரங்கவோம்

    ReplyDelete
  3. உண்மையில் இங்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தும் ஷிர்க்குக்கு இட்டுச் செல்லும் காரணிகளை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுலதாக நான் கருதுகின்றேன்.

    நல்ல மருத்துவ வசதிகள் இல்லாவிட்டால் ஜின் வைத்தியர்களையும் இன்னும் ஏமாற்றும் சூனியம், பில்லி, பால்பார்தல், தாயத்துக் கட்டுதல் போன்ற இன்னோரன்ன ஷிர்குடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஈடுபடுவதற்கு அது மனிதர்களை தூண்டிவிடும். எனவே சிறந்த வைத்திய வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் ஷிர்கை ஒழிக்கலாம் என்பதனை நாம் புரிந்துகொள்ள முடியும்.

    அடுத்ததாக முறையான கல்வி இல்லாமை ஷிர்க் பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள தடையாக அமைகின்றது. எனவே கல்வி மேன்பாட்டின்மூலம் ஷிர்கை ஒழிக்கலாம் என்ற அடிப்படையில் கல்வி வளர்ச்சிக்காக மிகச் சரியான ஒரு பொறிமுறையை முன்வைப்பது இன்றியமையா தேவையாகும்.

    மேலும் இணைவைப்பதற்கு இன்னொரு பிரதான காரணம் சிந்தனை தெளிவின்மையாகும். போதை பொருள் உட்கொள்கின்ற சந்தர்பத்தில் தன்னிலை மறந்து முழுக்க முழுக்க பாவத்தில் மூழ்கிவிட அது காரணமாகிவிடும். எனவே சிந்தனை தெளிவை ஏற்படுத்தி ஷிர்க்கிலிருந்து மக்களை தூரமாக்குவதட்கு போதைப்பொருல் உட்கொள்ளுவதில் இருந்து முற்றாக விடுபட்ட ஒரு சூழலை ஏற்படுத்துவது மிகச் சிறந்ததாகும் என்ற அடிப்படையில் போதைபொருள் சம்பந்தமாக இப்படியான ஒரு நிலைபாட்டை வெளிப்படுத்துவது நியாயமானதாகும்.

    அடுத்ததாக ரசூலுல்லாவின் முன்மாதிரிகளை உண்மையான வடிவில் அறிந்து கொல்லாமையும் ஷிர்க்கில் மூழ்கிவிட காரணமாகிவிடுகின்றது. எனவே ரசூலுள்லாவின் போதனைகள் பற்றிய மிகச்சரியான உண்மைகளை மக்கள் மயப்படுத்துவதன் மூலம் ஷிர்கை ஒழித்துவிடலாம் என்ற அடிப்படையில் ரசூளுல்லாவின் முன்மாதிரிகளை சமூகமயப்படுத்த முன்வருது மிகச் சிறந்த ஒரு விடயமள்ளவா?.

    எனவே மேலே கூறப்பட்ட விதத்தில் நோக்குமிடத்து இந்த மகாநாட்டில் மேட்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள் மிகச் சரியான தீர்மானங்கல்தான் என்பதனை புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  4. Brother MMH Marikkar,

    It is hilarious comedy of the year yet that this Thawheed Jamaath making the so called "Resolutions" at Kalpitiya venue and your subsequent assertion as these are correct steps to eradicate the imaginary Shirk from this area.

    As said by brother Atteeq Abu, these are pure social service and nothing else. Many groups, Jamaaths, civil societies, law enforcing authorities already engaged in these tasks. May be this Thawheed Jamaath also can be a part of this. No issues. But, do no try to show that no such services were existing before and they are the pioneers to start such service in this area.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Br. Kayal. With due respect to your remarks I would like to reiterate that despite the fact that the concerned areas are falling within the social services span, promoting those sectors meeting the demand of our society will definitely make a ginormous room to eradicate the misconceptions about Islam, especially the aspects that are related to SHIRK.

    I agree that such services are existing among our society, however, those services are not copy written to any of the authorities groups or clans and or circles to claim ownership as you have assumed. Thowheed Jamaath might have realized their weakness in these areas, and it can be an effort to broaden their narrow ascertains, pertaining to matters beyond Shirk and Bidath. Hence I personally welcome such a move from Thowheed Jamaath....

    ReplyDelete

Powered by Blogger.