Header Ads



SLTJ க்கு எதிராக பொதுபல சேனாவின் வழக்கு ஜூன் 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு


ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிராக BBS தாக்கல் செய்துள்ள மத நிந்தனை வழக்கு எதிர்வரும் ஜூன் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

SLTJ யின் செயலாளர் சிங்கள மொழியில் ஆற்றிய ஒரு உரையில் பௌத மதத்தை இழிவு படுத்தும் விதமாக பேசியுள்ளார் எனக் கூறியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

அத்துடன் சிங்கள பாடலாசிரியர் இராஜ் உருவாக்கிய மனு சதா எனும் பாடலில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி குறித்த உரையின் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதையும் இனவாதத்தை தூண்டி சக வாழ்வை பாதிக்கும் விதமாக அந்த பாடல் அமைந்துள்ளதையும் சுட்டிக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முன் வைத்த குற்றச் சாட்டில் உண்மைகள் இருப்பதாகவும் குறித்த பாடல் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத் முறைபடி புகாரளித்தால் அது தொடர்பான விசாரனைகளை முன்னெடுக்கலாம் என்றும் கொழும்பு குற்றவியல் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதை நீதி மன்றமும் ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.