யார் இந்த Royal Youths..?
முழுக்க முழுக்க இளைஞர் படையை கொண்ட ஓர் அமைப்பு.
இயக்க வேறுபாடுகள் இல்லை. இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு நல்லதைச் செய்ய வேண்டும் என்ற இளரத்தங்களின் எழுச்சி..
.
2012 மார்ச்சில் ஆரம்பித்தார்கள்..
இஸ்லாமிய வாசிகசாலை, ரமழான் வகுப்புகள், பாடசாலைகளுக்கு புத்தக அன்பளிப்புகள் என்று முதலில் சின்னச்சின்ன விசயங்கள்.. பொறாமைக்காரர்களின் கேலிகளும் அலட்சியங்களுமே இவர்கள் உந்து சக்தி..
வளர்ந்தார்கள்..
.
சிறுவர் பராமரிப்பு இல்லங்கள், முதியோர் பராமரிப்பு இல்லங்களை அடிக்கடி சென்று சுகம் விசாரிக்கும் செயற்றிட்டங்கள், அவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்தல், இரத்த தான நிகழ்வுகள், சிரமதான நிகழ்வுகள், வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல், கல்வி சம்பந்தப்பட்ட செயலமர்வுகள், கல்வியோடு சம்பந்தப்பட்ட பொருளாதார வசதிகள், பாதை சீரமைப்பு, சீதன ஒழிப்பு செயற்றிட்டம், இப்தார் நிகழ்வுகள், அழிவுகள் என்று வந்தால் அத்தனையும் தூக்கி எறிந்து நிதி சேகரிப்பு செய்யும் நிகழ்வுகள் என இன்னும் இன்னும்.
.
இப்போது கடல் கடந்து பேசப்படும் ஒரு வெற்றிகரமான அமைப்பாக விஸ்வரூபம் எடுத்திருப்பது தான் இந்த இளைஞர் படையணியின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.
.
கடந்த மியன்மார் ரோகிங்கிய இனவெறிச் சம்பவத்தின் போது அல்லலுற்று ஒடுக்கப்பட்டு சர்வதேச உதவிகளை எதிர்பார்த்திருந்த மக்களுக்காக இவர்களால் ஒவ்வொரு வீடுகளின் வாசற்படியேறி வீதிவீதியாக சேமிக்கப்பட்டு அனுப்பப்பட்ட சுமார் 1.1 மில்லியனுக்கும் மேலதிகமான நிதியுதவி, மியன்மாரில் கஷ்டப்பட்ட மக்களின் கைகளுக்கு போய்ச் சேர்ந்ததும் அவர்களின் பிரார்த்தனைகளும் அவர்களின் நாவுகள் முணுமுணுத்த ரோயல் யூத் என்ற வாசகமும் அதையும் தாண்டி அவர்கள் முகங்களின் கண்ட புன்னகையும் என்னைப்பொறுத்தவரை இந்த இளைஞர் படையணியின் அதியுச்ச வெற்றி. Royal Youths கடல் கடந்து ஒலித்தது.
.
யார் இவர்கள்..
எந்த ஒரு அமைப்புக்கும் தலைமை இருக்கும்..
இவர்களுக்கும் உண்டு.. ஆனால் நிறைய பேருக்கு யார் என்றே தெரியாது.. ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரை எல்லாரும் தலைவர்களே. எல்லாரும் சம அந்தஸ்து வழங்கப்படுபவர்களே.பொறாமைக்குணம் கிடையாது.
.
யார் இவர்கள்.
நம்மைப் போன்று பேஸ்புக்களிலே போஸ்ட் என்றும் கொமென்ட் என்றும் நம்மோடு காக்கா தம்பி மச்சான் என்று உறவாடும் நண்பர்கள் தான்.. ஆனால் ஏதாவது சமுக சேவை என வந்தால் அத்தனையையும் ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டு முழுமூச்சோடு இறைவனுக்காக களத்தில் தன்னை அர்ப்பணிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
.
யார் இவர்கள்.
எந்த அரசியல் பலமும் கிடையாது.. அனுபவ பலமும் கிடையாது. பொருளாதார பலமும் கிடையாது.. பலமெனில் தன் கூட்டு ஒற்றுமையும் இறைவனின் துணையுமே
.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை என்று இளைஞர்களை சேர்த்த இந்த அமைப்பு இன்ஷா அல்லாஹ் வெகு சீக்கிரம் ஊர்கடந்து இனம் கடந்து பெருகும் என்பதே எம் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும்.
.
Royal Youths சார்பாக உதவி வழங்க விரும்புபவர்கள் தொடர்புகொள்ளுங்கள் .
.
அக்கரைப்பற்றில் சகோதரர் சப்னாஸ் -
0094 754563008
அட்டாளைச்சேனையில் சகோதரர் அர்ஹம் -
0094 774277789
கொழும்பில் சகோதரர் அப்சான் -
0094 750577555
ரோயல் யூத்ஸ்
0750688183
கட்டாரில் சகோதரர் Mohamed Hafrath
70635235
.
வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் இள ரத்தங்களுக்கும்..
மற்றும் தூய நோக்கத்தோடு களத்தில் சமுகப் பணி செய்யும் நல்ல அமைப்புகளுக்கும்
பிரச்சினை என்று வந்தால் இறைவனுக்காக பொருளாதார, உடல் உதவி செய்யும் அனைத்து நல்ல ஆத்மாக்களுக்கும்

jm.good advertise
ReplyDelete