Header Ads



அவர்கள் இதயத்தைப், பிளந்து பார்த்தீர்களா....?


-Raazi Muhammadh Jaabir-

வெள்ளமும், உள்ளமும்

ஒருவரின் உள்ளத்தில் இருப்பதை அறியும் சக்தி மனிதர்களுக்கு இல்லை.இதனால்தான் இவ்வுலகில் மனிதர்களின் 'செயல்களை' வைத்தும், மறுவுலகில் மனிதனின் 'எண்ணங்களை' வைத்தும் தீர்ப்பளிக்கப்படுகிறது.’ஒருவர் என்ன செய்கிறார்’ என்பது மட்டுமே இவ்வுலகில் ஒருவரை அளக்கும் அளவுகோல். அவர் எதற்காகச் செய்கிறார் என்பது, ஒரு மனிதனை அளக்கும் இறைவனின் அளவுகோல் அது. இறைவனின் அளவு கோலை மனிதர்கள் நாம் கையிலெடுக்கக் கூடாது.

வெள்ளத்தில் பாதிப்பட்டவர்களுக்கு உதவி செய்வது இறைவனிடத்தில் மிகப்பெரிய நன்மையைத் தேடித்தரக்கூடிய செயல்.யாராவது இந்தப்பணியில் ஈடுபட்டால் அது மிகவும் பாராட்டத்தக்கது.அவர் இறை திருப்திக்காகச் செய்கிறாரா அல்லது உலக நோக்கங்களுக்காகச் செய்கிறாரா என்பதை முடிவுசெய்வது மனிதர்களின் இதயங்களை வாசிக்கும் பிரமாண்டமான அந்த இறைவனின் பணி.பார்வை வீச்சுக்கு அப்பால் இருப்பது என்ன என்று காணமுடியாத பலவீனமான மனிதனின் பணி அல்ல.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த இளைஞர்கள் உதவி செய்கிறார்கள்.அதுதான் இங்கு முக்கியம்.எதற்காகச் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது இறைவன்.நீங்கள் அல்ல.அவர்களின் எண்ணங்களை அளவிட்டு அவர்களுக்கு நன்மையும் தீமையும் வழங்குவது இறைவன் மட்டுதான் நீங்களல்ல.உலக நோக்கங்களுக்காகத்தான் இவர்கள் செய்கிறார்கள் என்று நீங்கள் முடிவுக்கு வந்தால் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த "ஹுரக்காத் கூட்டத்தாரில் ஒருவர் ஷஹாதாவைச் சொன்னதன் பின்னரும் அதை நம்பாமல் அவரைக் கொன்ற உஸாமா பின் ஸைதிடம் நபிகளார் கேட்க கேள்விதான் உங்களுக்கும்.’அவர்கள் இதயத்தைப் பிளந்து பார்த்தீர்களா?”.

அநியாயத்திற்கு அனாவஷ்யமான பாவங்களைத் தேடிக்கொள்ளாதீர்கள். முடியுமானால் இந்தப் பணியில் இறங்கியிருக்கும் இளைஞர்களின் எண்ணங்களைத் தூய்மையாக்கித் தருவாயாக என்று இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

5 comments:

  1. May Allah Bless you for this timely religious advice for all our Muslism brothers and sisters.

    ReplyDelete
  2. Assalaamu Alaikkum
    நெத்திப்பொட்டுல அடிச்சமாதிரியான விளக்கம் இது.கடந்த ஜும்மவிற்கு சென்றிருந்தேன் கொழும்பில்.ஒரு மிம்பர் மேடை இயக்கவாதிகளை கிழி கிழி என கிழித்து வெல்லம்பிட்டி வெள்ளத்தில் காயப்போட்டுக்கொண்டு இருந்த்தது.

    ReplyDelete
  3. ..Try to HELP other or stay away without getting sin by uttering...

    ReplyDelete
  4. ALHAMDHULILLAH. SUPERB... VERY GOOD FOOD FOR THOUGHT.

    ReplyDelete

Powered by Blogger.