Header Ads



இம்­தியாஸை மீண்டும் தேசிய அர­சி­ய­லுக்கு வரும்படி, முஸ்லிம் பிரமுகர்கள் அழைப்பு


-விடிவெள்ளி SNM.Suhail-

அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்கும் முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் தேசிய அர­சி­ய­லுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலை­வரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலை­வ­ரு­மான என்.எம். அமீன் இந்த பகி­ரங்க அழைப்பை பேரு­வ­ளையில் வைத்து விடுத்தார்.

முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் எழு­திய சிங்­கள மொழி பத்தி எழுத்துக்களின் மொழி­பெ­யர்ப்­பான  'இதயம் பேசு­கி­றது' நூல் வெளி­யீடு நேற்­று ­முன்­தினம் பேரு­வளை பாஸியதுந் நஸ்­ரிய்யா மகளிர் கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது. 

குறித்த நூலை தமி­ழுக்கு மொழி­பெ­யர்த்த என்.எம்.அமீன் இந்­நி­கழ்வில் கௌரவ அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கோரிக்கை விடுத்தார். 

எமது நாட்டில் சிங்­கள ஊட­கங்­களில் அர­சியல் வாதிகள் சில பத்­தி­களை எழு­து­கின்­றனர். ஆனால் தமிழ் பத்­தி­ரி­கைகளில் அவ்­வா­றான பத்­தி­களை காண முடி­வ­தில்லை. நூலின் ஆசி­ரியர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் எழு­திய பத்­திகள் சில­வற்றை நாம் மொழி பெயர்த்து பிர­சு­ரித்­துள்ளோம். அவர் அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்­கி­ய­போதும் தனது பேனையை பயன்­ப­டுத்தி அறிவு நிறைந்த விட­யங்­களை புத்­தக ரூபத்தில் தந்­தி­ருக்­கிறார்.

அவரின் எழுத்து மூலம் தேசிய ஒரு­மைப்­பாடு, இன் ஐக்­கியம் மற்றும் மத நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்றார். 

உள்­நாட்டு, வெளி­நாட்டு, பொரு­ளா­தார, மேலைத்தேய ஆதிக்க சக்­திகள் மற்றும் மத விவ­கா­ரங்கள் பற்றி நூலா­சி­ரியர் தனது நூலில் விப­ரித்­துள்ளார். முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் சிங்­கள மொழியில் மிகவும் தேர்ச்­சி­பெற்­ற­வ­ராவார். இவரை எமது சமூ­கத்­த­வர்கள் படிப்­பி­னை­யா­கக் ­கொள்ள வேண்டும்.

அத்­துடன் இந்த நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் மூன்று மொழி­யையும் பயில வேண்டும். அதில் தேர்ச்­சி­ பெற்­ற­வர்­க­ளாக மாற வேண்டும். அப்­போ­துதான் நாம் முழு­மை­யாக இலங்­கை­ய­ராக மாற­மு­டியும்.

இதே­வேளை, முன்ளாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்­கா­ருக்கு நான் இங்கு ஒரு வேண்­டு­கோளை விடுக்­கிறேன். நீங்கள் புத்­தகம் எழு­து­வதை விட  இங்­குள்ள மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு அமைய நீங்கள் முன்னர் மேற்­கொண்­ட­தனை போன்று மீண்டும் அர­சியல் செய்ய முன் வர­வேண்டும். இத­னையே மக்­களும் விரும்­பு­கின்­றனர்.

இந்­நி­கழ்வில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்­க­ளுக்கும் முக்­கி­யஸ்­தர்­களும் இருக்­கின்­றனர். அவர்­க­ளி­டமும் இம்­தியாஸ் பாக்கிர் மாக்­காரை தேசிய அர­சி­யலில் ஒன்­றி­ணைய அழைக்­கு­மாறு கோரிக்கை முன்­வைக்­கிறேன் என்றார். 

இந்த புத்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதி­யாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சமும் கௌரவ அதி­தி­க­ளாக மேல்­மா­காண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோம­வன்ச, பிர­தி­ய­மைச்­சர்­க­ளான அஜித் பீ. பெரேரா, பாலித தெவ­ரப்­பெ­ரும, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான், நளிந்த ஜய­திஸ்ஸ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், எம்.எஸ்.எம்.அஸ்லம், முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் யூசுப் மற்றும் முன்னாள் பேரு­வளை நக­ர­சபை தலைவர் மஸாஹிம் முஹம்மத் உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்­டனர். 

இதே­வேளை, இங்கு உரை­யாற்­றிய மலே­சிய பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் ஏ.ஜீ. ஹுஸைன் இஸ்­மாயீல் மற்றும் ஜாமிஆ நளீ­மிய்யா கலா பீட பிரதிப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் ஆகியோரும், முஸ்லிம் மக்­களை வழி­ந­டத்­து­வ­தற்கு சமூகத் தலைவர்கள் மிகவும் அவ­சியமாகின்றனர்.

அதற்கு இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் மிகவும் பொருத்­த­மானவர்.

அந்த பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நேரடி கட்சி அரசியலுக்கு வராவிட்டாலும் சமூகத்திற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கக் கூடிய அறிவும் ஆளுமையும் கொண்டவர் இம்தியாஸ் என்றும் இங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.