முஸ்லிம்களின் மதங்கள் தாண்டிய பரோபகாரம் - அதிர்ந்துபோன தீயசக்திகள்
-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
அனர்த்த நிவாரணப் பணிகளில் முஸ்லிம் மக்களின் மதங்கள் தாண்டிய மனிதாபிமாணம், பரோபகாரம் கண்டு அதிர்ந்து போன தீயசக்திகள் மீண்டும் இனவாத காழ்ப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பெரும்பான்மையான பெரும்பான்மை சமூகத்தினர் மனதில் இடம்பிடித்துள்ள முஸ்லிம் மக்கள் மிகச் சிறிய விகிதத்தினரான தீய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றாது மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக இன மத பாகுபாடின்றி நாம் மேற்கொள்ளும் மனிதாபிமான சேவைகளை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள், ஆங்காங்கு இடம் பெறும் சிறு சிறு சம்பவங்களை பெரிதுபடுத்தி இனவாத சக்திகளுக்கு வலு சேர்ப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இத்தகைய கள நிலவரங்களை கருத்தில் எடுத்து சமூக ஊடகங்களை மிகவும் சமயோசிதமாகவும் பொறுப்பாகவும் எமது இளைஞர்கள் கையாள வேண்டும்.
எமது செயற்பாடுகளில் திருப்தி கொண்டுள்ள மத குருமார்கள், புத்திஜீவிகள், சமூகத் தலைமைகள், பயனாளிகளின் கருத்து வெளியீடுகளை கூட்டல் குறைத்தல் இன்றி பொறுப்புணர்வுடன் முக்கியத்துவமளித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது கட்டாயமாகும்.
அதே போன்றே நாம் எமது சமூகத்தினர் மத்தியில் செய்கின்ற சேவைகளுக்கு அளவுக்கதிகமான விளம்பரங்கள் செய்வதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுதல் சிறந்தததாகும்.
இந்த நாட்டில் சிறு பான்மையினராக வாழும் எங்களிடமிருந்து அரசாங்கம் செய்ய வேண்டியதும் தத்தமது சமூகங்களும் செய்ய வேண்டியதுமான அனைத்துச் சேவைகளையும் ஒரு சில தீய சக்திகள் எதிர் பார்ப்பது வினோதமான ஒரு விவகாரமாகும்.

Post a Comment