Header Ads



பிரித்தானியப் பிரதமரின், விருந்தில் மைத்திரி

பிரித்தானியாவில் நடைபெறும் ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இன்று -12- காலை விருந்து அளித்தார்.

லன்காஸ்டர் இல்லத்தில் நடந்த இந்த காலை விருந்தில் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உள்ளிட்ட பிரமுகர்களும், கலந்து கொண்டனர்.

அதேவேளை, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரையும்  சந்தித்துப் பேசினார்.


No comments

Powered by Blogger.