Header Ads



கருணை கோர விரும்பாத, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் தூக்கிலிடப்பட்டார்


வங்காளதேச விடுதலைப் போரின்போது விடுதலைக்கு எதிராக செயல்பட்டவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் நிஜாமிக்கு போர்க்குற்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

அவரது மேல் முறையீட்டு மனு மற்றும் சீராய்பு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, அதிபரிடம் கருணை மனு அளித்து நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பு மட்டுமே இருந்தது. அதேசமயம், அவரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துவந்தனர். எனவே, அவர் எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் என தகவல் வெளியானது. 

இதற்கிடையே ஜனாதிபதியிடம் கருணை கோர விரும்பாததால் நிஜாமி இன்று இரவு தூக்கிலிடப்பட்டார்

இதுகுறித்து உள்துறை மந்திரி அசாதுஜமான் கூறுகையில், “நிஜாமி தனக்கான கடைசி வாய்ப்பாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும்படி கேட்கப்பட்டது. அவர் கருணை கோரவில்லை.  எனவே, மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று இரவு அவர் தூக்கிலிடப்பட்டார் என்றார்.

5 comments:

  1. Haseena wants to meet Allah with blood of innocent people ... Look how can a Muslim leader and Muslim scholar plead a mercy from dictator like her... It is no first time many Muslim shoalrs have been made shaheed like this???
    How many scholars have been killed by Mubarack, Sisi, Sadam, Qadafi and many

    ReplyDelete
  2. May Allah forgive his sins and reward him paradise.

    " We do not take women as our leaders " BUT a woman leader like HASEENA.. what can you expect ?

    Obey Allah, Muhammad (sal) and Leader of your state.. BUT Haseena can not be considered as Leader for a Muslim country like Bangaladese as she is not eligible to be a leader in Muslim society as "WE DO NOT MAKE WOMAN AS OUR LEADER"

    May Allah guide her .. if not we ASK Allah to Replace her from this position.

    ReplyDelete
  3. Haroon Adamukku
    Woow what an invention...
    See how ignorance your thoughts are at least you could say a word about the bloody action of western puppet Haseena and her nasty regime....

    ReplyDelete
  4. Harroon,

    you seem to be another supporter of the so called dictators.

    ReplyDelete
  5. How come dimply we forget the killing of mujibur rahmzn and hid entire family...only surviver was haseena. Killrrs and supporters now in que

    ReplyDelete

Powered by Blogger.