சீனாவில் இப்படியும் ஏமாற்றுவார்கள்
-BBC-
சீனாவில் போலியான ஜெலிஃபிஷ் தாயரிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு தொழிற்சாலைகளை சீனக் காவல்துறையினர் முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.
சீனர்களின் உணவு வகைகளில் ஜெலிஃபிஷ்ஷை முக்கிய உணவாக பல நூற்றாண்டுகளாக விரும்பி உண்டு வருகின்றனர்.
மூன்று ரசாயணங்களைக் கலந்து தயாரிக்கப்பட்ட 10 டன் எடையிலான போலி ஜெலிஃபிஷ் சீனாவின் கிழக்கு மாகாணமான ஜிஜியாங்கில் உள்ள சந்தைகளில் விற்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
சாலட் வகை உணவுகளுடன் சிறிய துண்டுகளாக அரியப்பட்ட ஜெலிஃபிஷ் பகிரப்படுவது சீனாவில் வழக்கம். குறிப்பாக கோடைக்காலத்தில் சாலட் வகை உணவு சீனர் மத்தியில் பிரபலமானது.
இந்த போலி ஜெலிஃபிஷ் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் காவல்துறையினர் தற்போது விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
உண்மையான ஜெலிஃபிஷ் மஞ்சளாகவும் மீன் வாடையுடனும் இருக்கும். போலியானவை அவ்வாறான மீன் வாடை இல்லாமலோ நிறமற்றதாகவோ இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment