Header Ads



தாஜ்மஹால் மீது, பூச்சிகள் தாக்குதல்

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் காதல் சின்னம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால்.உலக பாரம்பரிய நினைவுச்சின்னமான தாஜ் மஹால் தற்போது பூச்சிகளின் தாக்குதலால் நிறம் மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பளிங்கு போன்று காட்சியளித்த இந்த தாஹ்மஹாலின் நிறம் தற்போது பச்சை நிறமாக மாறி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

தாஜ் மஹாலின் “இயற்கை அழகு” பாதுகாக்கப்படும் என கூறியுள்ளார், உத்தர பிரதேச பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தொல்பொருள் துறை ஆகியவற்றை சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கு தாஜ் மஹாலை ஆய்வு செய்து, நிற மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து அதற்கு விரைவான தீர்வு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுக்குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரபிரதேச சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திற்கு இந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.