மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு, இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம்
மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நசீத்துக்கு இங்கிலாந்து, அரசியல் அகதி என்ற நிலையை வழங்கி அடைக்கலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் (வயது 47). இவர் கடந்த 2012 பிப்ரவரி மாதம் அதிபர் பதவியில் இருந்தபோது, அந்த நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து முகமது நஷீத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்தது. 2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டது தொடர்பாக முகமது நஷீதை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மாலத்தீவு போலீசார் கடந்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி கைது செய்தனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு தொடர்பாக அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தலைநகர் மலேவுக்கு அருகில் உள்ள தூனிதூ சிறைச்சாலையில் முகம்மது நஷீத் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைவாசத்தின்போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்கு தண்டு வடத்தில் ஆபரேசன் நடத்த வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.அதற்கு மாலத்தீவு அரசு அனுமதி மறுத்து விட்டது. வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்திரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து விட்டது. அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலத்தீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, ஆபரேஷனுக்காக இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு முகமது நஷீத் புறப்பட்டுச் சென்றார். ஆப்ரேஷன் முடிந்து உடல்நிலை தேறியதும் மாலத்தீவுக்கு திரும்பிவர முஹம்மது நஷீத் மறுத்து விட்டார். அவரது ஓய்வூதியம், மருத்துவ சலுகை ஆகியவற்றை யாமின் தலைமையிலான அரசு முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அரசு நஷீதுக்கு அகதியாக தஞ்சம் அளித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தகவலை இங்கிலாந்து தரப்பில் இருந்து இதுவரை யாரும் உறுதி செய்யவில்லை. இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்ததை உறுதி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முகம்மது நசீத் அதில் கூறியிருப்பதாவது:- “ கடந்த ஆண்டுகளில் பத்திரிகை சுதந்திரம், கருத்துரிமை அவை நடவடிக்கைகள் போன்றவை இழந்துள்ளன.
தற்போது சர்வாதிகார ஆட்சிக்கு இணையான ஒரு அரசின்கீழ் மாலத்தீவு சிக்கியுள்ள நிலையில் நானும் இதர எதிர்க்கட்சி தலைவர்களும் நாடுகடந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே கருதுகிறோம்’ என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

For my best of knowledge.... BRITISH always protects CRIMINALS of 3rd world countries and Use them to destroy the Stability, Growth and Culture of these 3rd world nations.
ReplyDeleteThere are many sick people in Maldives... Why not take them and give treatment ?
Brother its a too high world perhaps to my knowledge you dont know fact of former male president
ReplyDeleteAs far as I know that former president was a good man and did lot of improvement in Maldives.
ReplyDelete