ஹிருனிகாவை காணவில்லை, மனோ கனேசன் எங்கே..?
-Mohamed Naushad-
மனோ கனேசனும் ஹிருனிகாவும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள். இதை அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக குறிப்பிடுகிறேன்.
மனோ கனேசனும் ஹிருனிகாவும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள். இதை அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக குறிப்பிடுகிறேன்.
கொலன்னாவ கடுவளை மற்றும் அவிஸாவளை தேர்தல் தொகுதிகள் வெள்ளக் காடாகி இன்றும் மக்கள் முழுமையாக மீள முடியாமல் தவித்த வண்ணம் உள்ளனர்.
ஹிருனிகாவை முழுமையாக காணவே இல்லை.
ஆனால் மனோ கனேசனுக்கு இது பற்றிய கவலையோ அக்கறையோ இல்லை. அவருக்கு வாக்களித்த மக்களுள் கணிசமான தொகையினர் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது அவர்களை திரும்பிக் கூட பார்க்காத மனோ மலையக மக்களுக்காக கொழும்பு கோட்டையில் உரிமைப் போராட்டம் நடத்துகின்றார்.
அதுவாவது பரவாயில்லை என எடுத்துக் கொள்வோம்.
ஆனால் அதை விட மிக கேவலமானது தனக்கு வாக்களித்த மக்களை முற்றாக மறந்துவிட்டு ஜெயலலிதாவின் வெற்றியை அவர் நேற்று ஒரு ஹோட்டலில் கொண்டாடி உள்ளமை. அவரை ஒரு மனிதாபிமானம் மிக்க அரசியல் வாதியாக எண்ணி இருந்தேன்.
ஆனால் சம்பந்தனுக்கும் மனோவுக்கும் உள்ளது ஒரே வகையான மனிதாபிமானம் என்பதை இந்த இயற்கை அனர்த்தம் உணர்த்திவிட்டது.
பொது தேர்தல் காலத்தில் என்னுடைய இந்தப் பக்கத்தின் ஊடாக தனிப்பட்ட முறையில் மனோ முஜிபுர் ரஹ்மான் ஹிருனிகா ஆகியோருக்காக பிரசாரம் செய்தவன் என்ற உரிமையில் இதை எழுதுகின்றேன். முஜிபுர் ரஹ்மானை தெரிவு செய்தமைக்கான பலனை மக்கள் இன்று அனுபவிக்கின்றனர். ஆனால் தங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்த ஹிருனிகாவையும் தங்கள் சகோதரனாக கருதிய மனோவையும் தெரிவு செய்தமைக்காக மக்கள் இன்று கவலை படத் தொடங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.


This is not a time Mano and Hirunika will care less.
ReplyDeleteAn important moment politicians will never want to
let pass . Let's wait for them to come out on this !
We saw Hirunika in Kolonnawa on 13 May 16, during bicycle race in memory of her late father.
ReplyDeleteIt looks like Hirunika has already decided that her
ReplyDeletefuture of politics is in trouble after her role
in the kidnap episode got exploded . Kolonnawa is
her winning post and when she is not there in need
means a lot to her voters . Let us wait and see her
excuse or silence !
Mujeeb is a very social minded Politician. ..
ReplyDeletefuture ASRAFF
This is simple example of dirty politics
ReplyDelete