Header Ads



சர்சைக்குரிய அனுச பல்பிட்டவுக்கு பதவி - அரசாங்கத்தின் வெட்கம்கெட்ட செயல் என்கிறது கபே

இந்த அரசாங்கம் ஓர் வெட்கம் கெட்ட அரசாங்கம் என கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. உள்துறை அமைச்சின் மேலதிக செயலாளராக சர்ச்சைக்குரிய அனுச பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நியமித்தமை ஓர் வெட்கம் கெட்ட செயல் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 600 மில்லியன் ரூபா  பெறுமதியான ஆடைகள் மோசடி வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவராக பெல்பிட்ட கருதப்படுகின்றார். இந்த பாரிய மோசடிகளை மூடி மறைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் பெல்பிட்ட தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments

Powered by Blogger.