ஏன் எங்கள் குடும்பத்திற்கு, இவ்வாறு செய்கின்றீர்கள்..?
ராஜபக்சாக்களை பழிவாங்குதில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் முன்னாள் பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கைது செய்பய்பட்டிருந்தார். இந்தக் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்சவை இதற்கு முன்னரும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தற்போது மேலும் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளனர்.
ஏன் எங்கள் குடும்பத்திற்கு இவ்வாறு செய்கின்றீர்கள்? நாட்டு மக்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அவற்றை எல்லாம் விட்டு விட்டு ராஜபக்சாக்களை துரத்தி துரத்தி பழிவாங்கப்படுகின்றனர்.
முப்பது ஆண்டு கால போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குடும்பத்தாரை இந்த அரசாங்கம் பழி வாங்குகின்றது என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

After won the war.your family became worster then prabakaran.also corrupted the country.your family oppressed minority people.thats what k8nd of things happend
ReplyDeleteஇதுவும் நீங்கள் முன்செய்த கருமவினை. விதைத்த வினையை அறுக்க வேண்டாமா bro?
ReplyDelete