Header Ads



மகிந்தவிற்கு ஏதாவது நடந்தால், மக்களின் பதில் என்னவென்பதை அரசாங்கம் அறிந்துகொள்ளும்..!


நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிற்கு ஏதாவது நடந்தால் மக்களின் பதில் என்னவென்பதை அரசாங்கம் அறிந்து கொள்ளுமென கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.

மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பை வலியுறுத்தி, மினுவாங்கொடையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க,

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமையானது பாரிய தவறாகும்.

பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக போராடி நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்த தலைவரின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமையானது அவருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

நாட்டில் பெரும்பாலானோர் புலம்பெயர் தமிழர்களின் நண்பர்கள் இருக்கின்றனர். எனவே மஹிந்தவுக்கு இராணுவ பாதுகாப்பு அவசியம் தேவைப்படுகின்றது.

எனினும் மஹிந்தவின் பாதுகாப்பை நீக்கியுள்ள நிலையில், அவருக்கு ஏதாவது நடந்தால் மக்களின் பதில் என்னவென்பதை அரசாங்கம் அறிந்துகொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் இராணுவத்தினரின் பாதுகாப்பை வழங்கக் கோரி கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவாவில் உள்ள சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. You lost the election... What the people(?) did for it.

    Majority of the people of this country did not select you but MY3...

    If MY3 walk straight people will keep him.. if he follows your way he will be replaced by MY4 and MY5 so on.

    ReplyDelete

Powered by Blogger.