Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையா..? மூத்த மாணவியின் வாக்குமூலம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு........

அன்பின் உறவுகளே!

பகிடிவதை தொடர்பான ஆதாரமின்றி சில அவதூறுகளை யாரோ ஒரு சகோதர் பகிர்ந்திருந்தார். மிகவும் கவலைக்குரிய விடயமென்னவென்றால் நடக்காத சில விடயங்களை நாகரிகமின்றி சொல்லியிருக்கிறார்.

பல்கலைக்கழகத்தில் எத்தனையோ அநாச்சாரங்கள் அப்பட்டமாய் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மனிதன் தவறு செய்கின்றவன் என்ற அடிப்படையில் பல்கலாசாரங்களை காணும் போது தன்னை அறியாமலேயே தவறுகளின் பக்கம் ஈர்க்கப்படுகின்றான்.

அது போலவே பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைச் சூழலுக்கு வந்தவுடன் தங்களை அறியாமலேயே ஒரு வகையான கலாசாரத்திற்கு உள்வாங்கப்படுகின்றனர். உபதேசம் செய்தல் ஒரு முஃமினுக்கு பயன்படும் என்ற வகையில் மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக திகழ வேண்டும். பல்கலையில் பாடம் தவிர்ந்த அனைத்து விடயங்களையும் மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மூத்த மாணவர்களை இளைய மாணவர்கள் மதிக்க வேண்டும் ஏனெனில் இளைய மாணவர்கள் மூத்த மாணவர்களின் பால் தேவையுடையவர்களாக உள்ளனர். அது போலவே மூத்த மாணவர்களும் இளம் சொந்தங்களுடன் அழகான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைய மாணவ சமூகம் கட்டுப்பாடுகளை விட சுதந்திரத்தையே அதிகம் விரும்புகின்றனர். கட்டுப்பாடில்லாத ஓர் சமூகம் முதுகெழும்பில்லாத ஒரு உயிருக்கு ஒப்பாகும் , அச்சமூகத்தால் நிமிர்ந்து நேரான பாதையில் செல்ல முடியாது. கட்டுக்கடங்காத ஒரு மாணவர் சமூகத்தை பல்கலைக்கழகங்கள் உருவாக்குமென்றால் நாளை எமது சமூகத்தின் நிலை குறித்து மிக ஆழமாக சிந்திக் வேண்டும்...

இன்றைய இளம் சொந்தங்களின் நிலை மிகவும் கவலைக்குரியது. நாம் ஏன் இவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டும் ?? ஏன் இவர்களுக்கு கட்டுப்பட வேண்டும்?? எங்களை கண்கானிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?? இவர்கள் என்னதான் செய்து விடுவார்கள் என்று பார்ப்போமே

என்ற ஒரு வகையான தலைக் கணத்தை காணக்கூடியதாக உள்ளது......

ஸலாம் சொல்லுதல் , வீதி ஒழுங்கு , ஆடை அமைப்பு , அமைதி பேணல் ..... போன்ற சில ஒழுக்கவிதிகளைக்கூட பகிடிவதை என்கிறார்கள். இதறற்கு சில வேளை பகிடிவதை இது தான் என்று அடையாளப்படுத்தாமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஸலாம் தாத்தா , ஸலாம் நாநா என்று சொன்னதற்கு போடா போடி என்று பதில் சொல்லுமளவிற்கு படித்த முட்டாள்கள் இங்கு யாருமில்லையென்பதை ஆணித்தரமாக சொல்கின்றேன். பொய்யான சில தகவல்களை சமூகத்தில் பரப்பி, முஸ்லிம் மாணவ சமூகத்தின் முன்னேற்றப் பாதைக்கு தடை விதிக்காதீர்கள். பல்கலைக்கழகத்தின் அடையாளத்தை மங்கச் செய்யாதீர்கள். மூத்த மாணவர்களை எதிரிகளாய் காட்டி அவர்களது உரிமைகளை பரிக்காதீர்கள்.

முஸ்லிம் சமூகம் தவறும் பட்சத்தில் அம்பலப்படுத்தாது அமைதியாய் பேசி நல் வழி காட்டுங்கள். தவறுகள் இருப்பின் மன்னிப்புக் கோறுகிறேன். நானும் ஒரு மூத்த மாணவி என்ற வகையில் சில விடயங்களை நீங்கள் ஆழமாக சிந்தித்து எழதியிருந்தால் உங்கள் விமர்சனங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம். 

சிந்திப்போம் செயற்படுவோம். நாளை இறைவன் முன்னிலையில் நாங்களும் கைதிகளாகும் நிலை வராமல் பாதுகாத்துக்கொள்வோம் ......☺

நட்புடன்
- இவள் வள்ளுவன் வாசுகி -

Article 02

அஸ்ஸலாமு அலைக்கும். திறந்த மடல்களை எழுதும் சகோதரிகளே! சற்று சிந்தித்து எழுதுங்கள். நீங்கள் பல்கலைக்கழகத்தினுள் இருந்தால் மாத்திரமே உண்மை நிலையை அறிந்து கொள்வீர்கள்.South Eastern university ல் முஸ்லிம் மாணவர்கள் அதிகமாக இருந்தும் பகிடிவதை என்ற பெயரில் மோசமாக நடந்துகொள்வதாக வதந்திகளை பரப்பி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். Seniorsன் வழிகாட்டலோ ஒரு கட்டுப்பாடோ இல்லாமல் இருந்தால் இன்று இங்கு கற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்திருக்கும். ஸலாத்திற்கு உரிய முறையில் பதில் கொடுக்க முடியாத அளவுக்கு மோசமான மாணவ சமூகமில்லை நாம். குடை தூக்க விடுவதில்லை என்பதை சுட்டிக்காட்ட தெரிந்த உங்களுக்கு ஏன் எந்த அலங்காரமும் அற்ற அபாயாவும் பர்தாவுமே அணிய வேண்டும் என கட்டளையிடப்படிருப்பது தெரியவில்லையா,seniorsன் அனுமதியின்றி கண்டபடி வெளியில் செல்லக்கூடாது என முஸ்லிம் மாணவ சமூகத்தின் பாதுகாப்பில் கரிசனையாக நடப்பது கேள்விப்படவில்லையா.. இந்த பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிட்டு இலங்கையில் உள்ள ஒரே முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட முஸ்லிம்களின் இந்த சொத்தை பொய்களை பரப்பி இழிவுபடுத்தாமல் உண்மை நிலையை அறிந்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களால் கட்டியெழுப்புவோம். ஆலையில் கசங்காத கரும்பு ஒரு நாளும் சக்கரை ஆவதில்லங்க... Seniors இடம் பண்படாத juniors பல்கலையில் வாழ வழியல்லங்க.... ஸலாம் கூறுவது அவர்களின் ஆளுமையை வளர்க்கத்தான்.மாறாக seniorsக்கு அதுல உள்ளார்ந்த சுயநலங்கள் எதுவுமில்லப்பா.... ஆடைகக்கலாச்சாரம் பகிடிக்காக செய்யலம்மா பாவங்கள் சூழாமல் பாதுகாக்கின்றது..... வரிசையில் செல்வது ஒரு அவமானமல்ல அது தலைமைத்துவத்திட்கான படிக்கல்.... File cover எடுத்துச்செல்ல வது அவமானமல்ல அது சக நண்பனை இனங்கான செய்யும் தேடல்கருவி... இவைகள் பகிடிவதை எனாறால்...சொல்பவர்கள் சுயநலவாதிகள்... கேளுங்கள். ...இது பல்கலைக்கழகம் மாறாக பல்புத்தக நிலையமல்ல... இங்கு பண்பட்ட மாணவன் நாளைய தலைவன்... வித்திடப்படுவது செடிக்காகவல்ல பெரும் விருட்சத்திட்காக.... Seniors மிதிக்கப்பட வேண்டியவர்களல்ல மதிக்கப்பட தகுதியானவர்கள் அவர்களின் வழிகாட்டலில் ஓரு சாம்ராஜ்யம் உருவாக்கப்படுகிறது என்பதற்காக..... நினைவிருக்கட்டும் இன்றைய seniors நேற்றைய juniors.....இன்றைய juniors நாளைய seniors.... காவோலை விழ குருத்தோலை சிரிப்பது அடையாலமல்ல அறிவீனம்.

- இவள் வள்ளுவன் வாசுகி -

25 comments:

  1. When I was reading I felt Sema comedy.
    Doing one sharing another one

    ReplyDelete
    Replies
    1. Correct correct.. oru muslim ra maanatha. Vaangittu athukku velakkam vera

      Delete
    2. Bro anga muslims idaila otruma illa oor oora pirichi vaichu sanda than vetkakkeadu

      Delete
  2. அதெல்லாம் சொல்ல நீங்க யாருங்க??
    அந்த juniors யாரும் குழந்தைகள் இல்லை.

    ReplyDelete
  3. வள்ளுவன் வாசுகியன் கடைசி வரிகளை சிலதை பார்க்கின்ற போதே ஊகிக்க முடிகின்றது, குறித்த பல்கலையின் உள்ளக கலாச்சாரம் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை. இலங்கையில் ஒப்பீட்டளவில் கேவலமாக பகிடிவதை நடக்கும் பல்கலைக்கழகம் SEUSL தான். வெட்டுக்குத்து சம்பவங்களும் இங்கு பதிவாகியிருக்கிறது வாசுகி.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது மாதிரி நடந்தால் பிழை இல்லை.. seusl மாணவர்கள் பல்கலைகழகம் புதிய மாணவர்கட்கு ஆரம்பிக்க முதலிருந்தே ஆரம்பிச்சுட்டாங்க raking இனை.. ex.வேப்பங்காய் மானம் &etc... ஆதாரம் இருக்கு எல்லாத்துக்கும்

    ReplyDelete
  5. This is how they justify ragging in other Universities as well. Student's don't develop persinality or leadership through harassment. This must stop. It is illegal. That is not Islamic way of treating juniors.

    ReplyDelete
  6. This is the same rubbish JVP student unions tell to harass students.

    ReplyDelete
  7. மூத்த பல்கலைகழக மாணவசெல்வங்களுக்கு : சலாம் சொல்லுவதற்கு இஸ்லாத்தில் உள்ள வழிமுறைகள் என்ன. ஜூனியர் சீனியர் க்கு சொல்வதா இல்லை யார் முதலில் பர்கின்றரோ அவர் சலம் சொல்வதா ? சற்றூ விளக்க முடியுமா.

    ReplyDelete
    Replies
    1. Intha kealvikku mooththa maanavi moonchiya enga kondu veppa

      Delete
  8. It is subjected to physical or psychological torture - wiki
    மூத்தவங்களுக்கு இதோட அர்த்தம் புரிஞ்சா சரி

    ReplyDelete
  9. I have seen raking in south eastern uni, so plz take necessary action for STOP this kind of attitudes and violence of Islamic culture too. Dear sister ur said "Jr. student said salaam for Sr, student" ur feel this is way of Islam? No , Who is the person see firstly he or she should be say Salaam.

    Anyway in ur article u also accept some type of raking going on in SEUSL. So please consider upcoming students are ur Sisters and brothers likewise and STOP these bull-shit raking culture.

    ReplyDelete
  10. senior ஐ எப்படி மதிப்பது என்பதை கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக அடுத்த வருடம் சேரவிருக்கும் junior களுக்கு எப்படி பகிடிவதை செய்யலாம் என்பதையே நீங்கள் உங்கள் junior களுக்கு கற்றுக்கொடுக்கிரீர்கள்...... பல்கலைக்கழகம் செல்வது அறிவை வளர்த்து சமூகத்துக்கு நன்மை பயக்கவே தவிர இந்த முறை அற்ற கலாச்சாரத்தை வளர்க்க அல்ல

    ReplyDelete
  11. வள்ளுவன் வாசுகி என்றால் வள்ளுவனின் பொண்டாட்டியா நீங்கள்சகோதரி? இதிலே தெரியவில்லையா உங்கள் இஸ்லாத்தின் தரம்? வள்ளுவனுக்கு வாசுகியல்ல உங்கள் தகப்பின் பெயரை கூறி இன்னாரின் மகள் என்று சொல்லுங்கள் !! அதுதான் இஸ்லாமிய பெண்டிர்க்கு அழகு !

    ஊர் வாயை மூட, வீட்டிற்குள் பகை இல்லை என்று சொல்வது மனித வழக்கம். அதே போல சமூக ஆர்வலர்கள் வாயை மூட ரேகிங் நடக்கவில்லை என்று சொல்வது வல்லுவர்கலதும் வாசுகிகளதும் வழக்கம் போல ?

    என்னது ?? சீநியஸ் நீங்கள் சாம்ராஜ்யம் உருவாக்குகின்றீர்களா ?? அதெப்டி ? நீங்க வாசுகி , நீங்க உருவாக்கினா தேவயானியும் ஜோதிகாவும் தான் உருவாகுவாங்க , கதீஜக்களும் , உம்மு ஹபீபாக்களும் , பாத்திமா சஹ்ராக்களும் உருவாக மாட்டார்கள் !! வாசுகி வந்துட்டாங்க பெரிய வாசுகி .. நாசமாப் போச்சி போ ..

    எனது தங்கை தென் கிழக்கு பல்கலைக் கழக கலா பீடத்தில் கடந்த வாரம் உள் வாங்கப் பட்டார், அவரும் இன்று வரைக்கும் குடை இன்றி வருமாறு தான் அவரின் சிரேஷ்ட மாணவர்கள் மூலம் பகடி வதை செய்யப் படுகின்றார். அதெப்புடி ஆதாரம் இல்லாம போகும் ?? இதை வாசிப்பவர்கள் புதிய மான மாணவியரை விசாரியுங்கள் !
    என்னம்மா இப்புடி பன்றின்களே மா ?
    ஒன்றுமே நடக்கவில்லை என்று சொன்னால் , நம்பிவிட நாங்கள் என்ன வள்ளுவன் பாட்டு கேட்கவந்த கோமாளிகளா ?


    http://www.jaffnamuslim.com/2016/05/blog-post_408.html

    மேலே உள்ள இணைய முகவரியை பார்க்கவும் ! காபிரான ஒரு மூத்த விரிவுரையாளர் பகடி வதைக்கு எதிராக அரசாங்கத்தையும் சட்டத்தையும் வருமாறு கூப்பிடும் கூச்சல் கேட்கின்றது அங்கே !
    வாசுகி அம்மாக்களே , அறிவைக் கொஞ்சம் பாவியுங்கள். பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு போதும் இந்த குற்றச் சாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் நானும் உங்களுக்கு முன்னாள் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரிதான் , இலங்கையன் தான் !
    அண்டி ரேகிங் கழகத்தில் தான் நான் இருந்தேன். உங்கள் கூத்துகள் அம்பலமானால் , இப்புடித்தான் வசை பாடுவீர்கள் என்பதையும் நான் அறிவேன்.
    வள்ளுவருக்கு பசி வந்திருக்கும் , போய் சாப்பாடு போடும் வேலைய பாருங்கம்மா வாசுகி

    ReplyDelete
  12. veyppankaai saapidda seththiduviya rifky? summa pooooppa katha vidama

    muslim samukathettku erukkira oray oru university athu.

    ReplyDelete
  13. வந்துட்டாங்க நியாயம் கற்பிக்க பெயரை பார்த்தாலே விளங்குது உங்கள் இஸ்லாமிய பண்பாடு உனக்கு உன் பெற்றோர் அழகான பெயர் வைத்திருக்கும்போது உது திமிரை காட்டுவதற்காக பெயரையே மாற்றி இருக்கிறாய்.போய் வேலையை பாரும்மா.எதோ இவள் மட்டும்தான் இலங்கையில் பட்டம் படிக்க போனது போன்று நாடகம் நடிக்கிறா அம்மா.உன்னை விட அப்பன் பல்கலைக்கழகம் பட்டம் பெற்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே தாயே.மனிதனுக்கு நேர்மை ,உண்மை,அடக்கம்,பண்பு,பரிவு,தயவு,போன்றவை தேவை.உயர் தரப்பரிட்சையில் யா அல்லாஹ் யா அல்லாஹ் என்று கெஞ்சிக்கெஞ்சி இரண்டு மூன்று தரம் பரீட்சை எழுதி அல்லது யாரையாவது பிடித்து குதிரை ஓடியாவது குறைந்த பட்சத்திலாவது எடுபட்டவுடன் அல்லாஹ்வை மறந்து தலைக்கனம் பிடித்து பழையதை எல்லாம் மறந்து தனது சகோதர மனிதனை மனிதனாக மதிக்காமல் திமிராக நடப்பது எந்த இஸ்லாம்.அல்லாஹ் ஒரு வசனத்தில் சொல்கிறான் உங்களுக்கு அதிகமான தந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து தலைக்கனம் பிடிக்கிறது என்று.அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்.

    ReplyDelete
  14. This eldest Vaasuki.... needs racking....

    ReplyDelete

  15. As an old students of SEUSL i was ashamed of reading above article, in this 21st era as a Muslim still we are trying to justify the third class animal behavior of ragging .....Its the duty of each Muslim to teach and guide my fellow br/sis abt not only the new culture but even the customs, knowledge ..etc
    Imaam Buhari once said "If i could make a knowledge as Morsel/mouthful, i will make it and i will feed my students"...prophet (sal) said ALLAh make mercy on them, the people those who give space to sit to the fellow br/sister by adjusting themselves upon their late arrival to join their on going gatherings (rephrased)..... This is the behavior we need to witness in SEUSL not bullying and teasing by the name ragging.

    ReplyDelete
  16. பல்கலைகழகங்களில் புதிய மாணவர்களை பகடி வதை அதாவது ரேக்கிங் என்கின்ற பெயரில் பல இன்னல்களை கொடுக்கும் எமது முஸ்லிம் மாணவர்களே

    பிறமத மாணவர்கள் எமது இஸ்லாமிய மாணவர்களை ரேக்கிங் செய்ய எண்ணம் வைப்பதில்லை.
    நமது கேவலம் கெட்ட இஸ்லாமிய மாணவர்களே அதற்கு வழி வகுத்து கொடுக்கின்றனர்.

    ஆறரிவு கொண்ட படித்த மிருகங்களை விடவும் மோசமான சிந்தனைகளைக் கொண்ட நீங்கள் மனிதாபிமானம் பற்றி பேச துப்பற்றவர்கள். இன்று இது நடைமுறை கலாச்சாரம் என்று சொல்லும் நீங்கள், நாளை உங்களுடைய பிள்ளைகள் இதே நடைமூறை கலாச்சாரம் என்ற பெயரில் கற்பழிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்.

    நீங்கள் காட்டிக் கொடுக்கும் வழி உங்களின் பின்னால் வரும் சந்ததிகளும் பின்பற்றுவார்கள்.
    ஒரு இடத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விட்டால் நாளை மோசமான பாதைக்கு இட்டுச் செல்லும்.

    நீங்கள் எல்லாம் படிச்சி கிழிச்ச இதுக்குத்தானா.
    என்ன ம ***கு படிச்சிங்க.
    இதில பெண் தாய்க்குலம் வேற.
    கேவலம் கெட்ட புழப்புடி உங்களுக்கு எல்லாம்

    நாளைக்கு உன்ட ஊட்டு தங்கச்சி
    உன்ட ஊட்டு மதினி,மருமகள். மகள் என்று வந்து இப்படி நடந்தா பாத்திட்டு இருப்பிங்களா

    பெண்களே பெண்களா இருங்க.
    மதிக்கும் படி நடந்து கொள்ளுங்க.
    பகடி பன்னுரன்னா உங்கட புருஷனே
    பகடி பண்ணுங்க.
    படிக்க வார பெண்களே ஏன்டி பகடி ரேக்கிங் பண்ணுரிங்க.

    ஆண் மக்களே ஆம்புள என்டா பிள்ளை கொடுக்கிர வீரத்துக்கு மட்டும் சொல்லுரல்ல. தன்னாலே ஒரு பெண்ணுக்கு எந்த இடைஞ்சலும் வரக் கூடாது என்று நினைக்கிரதுக்கும் பெயர்தான் ஆம்புள.
    மனிதாபிமானத்த எழுத்திலே சொல்லுர கூட்டமா இருக்கமா செயல்ல காட்டுர கூட்டமா இருங்க.
    இல்லாட்டி போய் மாடு மேய்ங்கடா
    புண்ணாக்குகளா

    ரேக்கிங் பகடி வதை பண்ணும் கேவம் கெட்டவர்களுக்கு இது

    ReplyDelete
  17. வாடி வாடி வாடி
    தமிழோட திருமகளே
    வள்ளுவனோட பொண்டாட்டியே
    என்னாடி நெனச்சிக்கிட்டு இருக்க ??
    ரேகிங் பண்ணுவிங்களாம்
    அப்புறம் பண்ணாத மாதிரி நடிப்பிங்களாம்
    இப்போ
    இங்க ராக்கிங் இல்லே
    ஆட்டுக்குட்டியும் இல்லே நு சீனப் போட்டா உட்டுடுவோமா ?
    ஏய் எனக்கு ஞாயம் கேடச்சாகனும் டியே

    இதுக்கு நம்ம வாசுகி : தண்ணி குடிச்சிட்டு வந்து தகராறு பண்றியா ?

    நம்ம : பின்ன வள்ளுவன் பாடல கேட்டு வந்தா தகராறு பண்ணுவாய்ங்க ??

    இதுக்கு நம்ம வாசுகி : மரியாதையா போய்டு .. இல்லேன்னா போலீச கூப்புடுவேன்

    நம்ம எல்லாரும் சேந்து கோரஸ் : என்னம்மா இப்டி பன்றிங்களே மா .. என்னம்மா இப்டி பன்றிங்களே மா ..

    இந்த மூத்த முட்டாள்கள புடிங்க சார் .. புடிச்சி உள்ள போடுங்க !!

    ReplyDelete
  18. ""நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு கற்பிக்க விரும்புகின்றீர்களா ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்" என்று (நபியே!) நீர் கூறும்." (ஸூ ரதுல் ஹுஜ்ராத் : 16)..

    ReplyDelete
  19. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவற்றின் அடிச்சுவடுகளும் உங்கள் மண்ணறையை வந்தடைந்தே தீரும். (யாஸீன் : 12)
    மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. (பகறா : 256)
    ஆகவே நீங்க மார்க்கத்த நிர்ப்பந்தம் செய்ய தேவையில்லை.
    ஆனால் உங்கட கப்றுக்கு காலா காலம் பாவம் வந்து சேருவதை விரும்பினால் நன்மையாக மாற்றலாம். மீண்டும் மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. (பகறா : 256)

    ReplyDelete

Powered by Blogger.