Header Ads



முஸ்லிம்களை இருட்டடிப்புச்செய்த ஊடகங்கள்..!


-அமானுல்லாஹ் றயீஸ்-

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்ய  உடனடியாக களத்தில் இறங்கி உயிருக்குப் போராடிய சிறு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்  என அனைவரையும் மீட்கும் மீட்புப்பணியிலும் , அவர்களுக்குத் தேவையான குடிநீர் , உணவுப் பொருட்கள், உடைகள் , தங்குமிட வசதிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை  என அனைத்து விடயங்களிலும், தன்னலமற்ற முறையில்  இன , மத , மொழி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்த ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் ,முஸ்லிம் காங்கிரஸ் , முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம்  தனியார் நிறுவனங்கள் , முஸ்லிம் வர்த்தக சங்கத்தினர், ஹாஜியார் மார்களும்.செல்வந்தர்கள் என அனைவரும் உதவிக் கரம் நீட்டி , பணியாற்றிய விடயத்தை  இந்த  ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நமது நாட்டில்  முஸ்லிம்களில் ஒரு தனி நபர் சிறு தவறு செய்தாலும் அதனை கொட்ட பெரிய எழுத்தில் முன் பக்கத்தில் முழு முஸ்லிம் சமூகத்தை குற்றம் சுமத்தி போடுவார்கள் , நல்லது செய்தால் கண்டு கொள்ளமாட்டார்கள்.

சிங்கள, தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் காணாமல் போய்யுள்ளது , அதேவேளை தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள் தங்களது  செய்திச் சேவைகளிலும் காட்சிகளை காட்டவும் இல்லை , சொல்லவும் இல்லை. அதே போன்றுதான் வானொலி நிறுவனங்களும் செய்திச் சேவைகளில் குறிப்பிடவுமில்லை.

இது எமது சமுதாயத்தை மட்டம்தட்டும் நோக்கமாகத்தான்  இந்த  இனவாத ஊடகங்கள் செயற்படுகின்றன. இலங்கை நாட்டைப் பொருத்தவரை , நாம் எந்த ஒரு சேவையை செய்தாலும் செய்த விடயம் தொடர்பாக கட்டாயம் ஆவணங்களை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் பிற்காலத்தில் எமது சந்ததியினருக்கு சான்றாக அமையும்.இதனை விழிப்புணர்வுக்காக share பன்னுங்கள்.

21 comments:

  1. YES....this is what SLTJ known already and they are doing what they can...as well organized...
    We can not expect from any media bcs medias are for Musics, Dance & sex....simply you can see any simple matter they do like big things with young ladies pics.....so, they are for glamours....they need money..money..money..

    ReplyDelete
  2. so did u guys help others to show off in the newspapers ?

    ReplyDelete
    Replies
    1. Siva their not talking about that. Their saying media didn't highlight Muslim victims and their sufferings.
      We cannot blame them media. We Muslims have to have a media. These days all the media's not only in Lanka but also in other countries do the same. They only highlight Muslims for bad things. It's no point to mourn about it. We need to create a genuine true media society.

      Delete
  3. We need a media which operate overseas, so we can give accurate news for Sri Lanka.

    ReplyDelete
  4. அனர்த்தத்தில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு தொண்டாற்றுவதில் சகோதர இன தமிழ், சிங்கள இளைஞர்களும் களத்தில் இறங்கி, துணிச்சலுடன் செயல்பட்டனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

    இங்கு சிலரின் பதிவுகளைப் பார்க்கும் போது முஸ்லிம் இளைஞர்கள் மட்டும் தான் களப்பணியில் ஈடுபட்டனர் என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்குவது தோன்றுகிறது.

    சிங்கள மக்கள் நிறைந்து வாழும், நான் குடியிருக்கும் பகுதியில், கடைகளில் உள்ள பண்டங்கள் காலியாகும் வரை பொருட்களை வாங்கி தர்மம் செய்தனர்.

    ReplyDelete
  5. ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டு ,ஒளிபரப்பப்படுவதற்காகவா முஸ்லீம்கள் உதவிசெய்யப்போனார்கள்? உண்மையிலேயே இதனை நாம் பெரிதுபடுத்த தேவையில்லை,இவர்களது ஊடஹ்ங்களில் வெளிக்காட்டப்படாவிட்டாலும் அல்லாஹ்தலாவின் புத்தகத்தில் பதியப்பட்டிருக்குமல்லவா?
    சதிகாரர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனும் அவனால்லாவா?
    எண்கள் உதவிகள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக செய்யப்பட்டவையாக இருக்க வேண்டுமே ஒழிய வேறு எவரது திருப்திக்காகவோ அல்லது கவனத்தை திசை திருப்புவதற்காவோ புரியப்பட்டவையாக இருக்கக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமல்ல மீடியா காட்டாவிடினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும் யார் தமக்கு உதவி செய்தார்கள் என்று.
      இருந்தாலும் முஸ்லிம்களாகிய எங்களுக்கென்று ஒரு மீடியா இல்லை.

      Delete
  6. உமர்அலி முஹம்மத் இஸ்மாயில் சொல்லுவது சரிதான்

    ReplyDelete
  7. Umar Ali & Zawahir...are in deeeeep well....
    You must know the political tooo how you have to handle the country political...
    Kenattu thavalayaaga irunthidaathe athu samoogathukku paathippu mattumalla padu kuliyilum thalli vidum....

    The Artcle is not saying other community youngsters (Singhaleese & Tamils) not helped...
    Its clearly saying that any media never tell or show any single words about the effort of the Muslim community who did more than others.... That is the point

    ReplyDelete
  8. ஸ்ரீலங்கா தௌஹீது ஜமாஅத்து செய்வது வெல்ல நிவாரணப் பணியல்ல அது ஒரு படம்!!

    வெல்ல அனர்த்தம் போன்ற எந்தவொரு இயற்கை அனர்த்தம் என்றாலும் அதற்கான மீட்புப்பணி நிவாரண உதவிகள் செய்ய வேண்டியது அந்த நாட்டு அரசு.

    கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களின் போது பல தினங்கள் கடந்தும் எந்தவொரு அரசுசார் ஊழியமும் உதவியும் சென்றடையவில்லை என்பது உத்தியோகப் பூர்வமான செய்தி வழியாக நாம் அறிந்துகொண்டோம்.

    ஒரு அரசுக்கு இருக்கும் முப்படைப் பலம் அரச ஊழியர் என்ற ஆட்பலம் போன்றன நாடுபூராகவும் இருந்தும் இந்த நிலை என்பதை மனதில் ஆளப்பதிந்துவிட்டு இதைக் கேளுங்கள்.

    இவ்வலவு வளங்களைக் கொண்ட அரசு இருந்தும் செய்ய முடியாத சாதிக்க முடியாத சில வேலைகளை SLTJ துரித கதியில் அவர்களுக்கு இருக்கும் சொற்ப ஆட்பலத்தை வைத்து செய்துள்ளது.

    ஒரு கேடுகெட்ட இஸ்லாமியனுடைய குரலைக் கேட்க முடிந்தது. அவன் கூறும்போது SLTJ யை மிகவும் தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டி அடுத்தவன் காசுக்காக வெறுமனே இரண்டு பார்சலைக் கொண்டுவந்து கொடுத்து வல்லத்தில் ஏறாமலே அதன் அருகில் இருந்து படம் எடுத்து இவ்வாறு படம்காட்டுவதை விட தூக்குபோட்டுக் சாவது சிறந்தது என்று கூரிகின்றான்.
    https://www.facebook.com/mohammed.zaneer/posts/999460080174259
    இதையும் ஒரு செய்தியாக பதிவேற்றிப் பரப்பும் இந்த கயவன் எந்த அளவு காழ்புணர்ச்சி கொண்ட அயோக்கியனாக இருக்க வேண்டும்?

    பிரமாண்டமான ஆட்பலங்களை, படைப்பலங்களை தன்னகத்தே வைத்திருக்கும் அரசு, நான்கைந்து நாட்களாகியும் உதவிகள் எதுவும் செய்யவில்லை எனும் இடங்களுக்கு இரண்டு பார்சலையாவது உன்னுடைய பாஷையில் படம் காட்டவாவது SLTJ யினரின் சிலர் கொண்டுவந்தனரே?

    அவர்கள் எந்த உதவியை செய்யாவிட்டாலும் குறைந்தபட்சம் நீ இருக்கும் ஏரியாவில் மக்களை சந்திக்கவாவது வந்தார்களே?

    உன்னைப்போன்ற ஈனப்பிறவிகள், காட்டியும் கூட்டியும் கொடுக்கும் இஸ்லாமிய வேடம் தரித்த நயவஞ்சகர்கள் இருக்கும்வரை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி அந்நியர்களிடமும் இஸ்லாமியர்களுக்கு, இஸ்லாத்திற்கு நன்மதிப்பில்லை.

    இரானுவ சீருடையுடன் வந்தவனிடம்; நீ அரசாங்கத்தால் வந்துள்ளாய் என்பதைப் படம்-காட்டவா சீருடை அணிந்தாய் என்று கேட்பியா?

    ஜனாதிபதி மாளிகையின் புரியாணிக்காக முஸ்லிம்களது உரிமைகளை விட்ட உலமாசபை ஏதாவது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில் உதவி செய்ததா உனக்கு? குறைந்த பட்சம் படம்காட்டவாவது உன்னை சந்தித்தார்களா?

    ஜுப்பா தொப்பி போட்டுக்கொண்டு இறந்த பௌத்த பிக்குகளுக்காக பிரார்த்தனை செய்த கூட்டம் எங்கே?

    சாமியார்களுக்காக அவர்களது சவப்பெட்டியை தூக்கிய முல்லாக்கள், உன்னை பார்க்காது அவர்கள் ஒழிந்தது எங்கே?

    பொதுபல சேனாவுக்குப் பயந்து ஹலாலை விட்டுக்கொடுத்த ஹாஜியார்கள் உன்னை போன்ற முஸ்லிம்களைப் பார்க்காது அவர்கள் ஒழிந்தது எங்கே?

    சகோதரர்களே சிந்தியுங்கள்!!

    சீருடை டி-ஷேர்ட் எதற்கு என்று சிந்தியுங்கள்!!

    உங்களுடைய வக்கிரப் புத்தியை வார்த்தைகள் மூலம் வெலிக்கொனராதீர்கள்.

    எது செய்தார்களோ அதற்காகவாவது ஷுக்ர் செய்யுங்கள்.

    அவர்கள் எதற்கு செய்தார்கள் என்பதை அவர்களது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீர்களா?

    வேண்டாம் உங்கள் காழ்புணர்ச்சி, விட்டுவிடுங்கள்.!!!

    ReplyDelete
  9. Time has come to start an Islamic electronic media covering all SARC countries.

    ReplyDelete
  10. if intention is purely for Allahs sake. his media is more powerful then our media. so pl do it for Allah's sake. he will in other people's hearts and minds to look at our community kindly. this will be more powerful than those media

    ReplyDelete
  11. Brother umar ali comments very nice.i appreciate you.this is what true

    ReplyDelete
  12. எமது சகோதரர்கள் உதவிகளை விளம்பரப்படுத்தி நற்பெயர் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எமது சகோதரர்கள் தூய எண்ணத்துடன் அல்லாஹ்வுக்காகத்தான் செய்கிறார்கள். அதற்குரிய பலனை அல்லாஹ்விடம் எதிர்பாருங்கள்

    ReplyDelete
  13. Everything happens for a reason. This is a test. How we behaved in every way after this. Our brothers helped with good heart(?) We don't need publicity. If Allah happy with our deeds, That's enough for us. He knows everything.

    ReplyDelete
  14. Mr.Umar Ali நான் உங்களுடன் உடன் படுகின்றேன் அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்

    ReplyDelete
  15. என் அண்புச்சகோதரா்களே...

    அல்லாஹ்வுக்காக செய்யும் பணியை ஏன் மீடியாக்களில் போட்டுக்காட்ட வேண்டும்....??

    ReplyDelete
  16. சினிமாப்பாடல் போன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் வெறும் பஜனையையும் பிரசங்கங்களையும் உச்சாடனங்களையும் மதநூல் பாராயணங்களையும் மட்டும் ஒளிபரப்பி ஒரு ஊடகத்தை வெற்றிகரமாக நடாத்த முடியாது என்பதுதான் இங்குள்ள முதலாளித்து சுரண்டல் சமூகவமைப்பின் யதார்த்தம்.

    இதற்கு எந்த மத அமைப்புகளும் விதிவிலக்கு அல்ல.

    ReplyDelete
  17. இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கும்.

    ReplyDelete
  18. சகோதரர்களே இதை இத்தோடு விட்டுவிடுங்கள் இது சம்பந்தமாக கருத்துப்பரிமாற்றங்கள் தேவையில்லை முஸ்லிம்களின் உயரிய குணத்தினை அனைவரும் அறிவார்கள் யாராவது கஷ்டத்திலிருந்தால் எதையும் எதிர்பார்க்காமல் இறைவனுக்காக நாடிச்சென்று உதவும் உயரிய குணத்தை இறைவன் எமக்குத் தந்திருக்கிறான் அதற்கான கூலியும் அவனிடமே எதிர்கார்க்க வேண்டும் படம்போட்டுக்காட்டி அதனால் ஏற்படும் சிறு மகிழ்வு கூட எமது உன்னதமான நோக்கத்தை பாழ்படுத்திவிடும் இறைவனுக்காக செய்பவைகளை அவனைத்தவிர கூலிதரக்கூடியவன் வேறு யாருமில்லை அனைவரது உள்ளத்தையும் அறிந்தவன் இறைவன் யார் யார் என்ன நோக்கத்திற்காக எதைச் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவனே கூலி தருகிறான் யாரும் யாரையும் குறை கூறி எமது உயரிய பணியை கொச்சைப்படுத்தாதீர்கள் எந்த ஒரு அமைப்பைச் சார்ந்தவராயினும் அனைவரும் முஸ்லிம்கள் என்பதால் யாரும் யாரையும் கொச்சைப்படுத்தி அதன்பால் தீமையை நீங்கள் வாங்கிக் கொள்ளாதீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.