Header Ads



அல்லாஹ் போதுமானவன்..!


-Safwan Basheer-

வெல்லம்பிடியில் வசித்து வந்த நண்பன் அவன்.
பொருளாதார ரீதியாக நல்ல வசதி படைத்தவன்
வியாபார நோக்கமாக பல நாடுகளுக்கு பறப்பவன்
ஒரு மாத விடுமுறையில் வந்துவிடுவேன் என்று
மனைவியிடம் சொல்லிவிட்டு மலேஷியா சென்று
இருக்கிறான்.

கடந்த சனிக்கிழமை மனைவியிடம் இருந்து ஒரு 
தொழைபேசி அழைப்பு வருகிறது எனக்கு அடிக்கடி
நெஞ்சு வலிவருகிறது முடிந்தால் இம்முறை கொஞ்சம்
அவசராமக நாட்டுக்கு வந்துவிடுங்கள் என்று.

மனைவியின் அழைப்பில் இருந்த அன்பினால் புதன்கிழமையே
நாட்டுக்கு சென்றுவிடுவதற்கு நண்பன் தீர்மாணிக்கின்றான்
புதன் இரவு கடுநாயக்க வந்து இறங்கிய நண்பன் மனைவியின்
தொழைபேசிக்கு பலமுறை அழைத்தும் மனைவியிடமிருந்து
எந்தப்பதிலுமில்லை

மனைவியின் ''நெஞ்சுவலி'' குறித்த பயத்துடன் ஒரு வகையான
பதற்றத்துடனும் வீட்டை நோக்கிச் செல்கிறான் நண்பன்.
ஊரை அண்மிக்கையில் ஊரே இருளிலும், வெள்ளத்திலும்
மூழ்கிக்கிடக்கிறது

தனது வீட்டையோ, வீட்டுக்குச் செல்லும் வீதியையோ
நண்பனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை
ஒரு படகின் உதவியோடு பாதி மூழ்கியிருந்த தனது
வீட்டை அடைகிறான் நண்பன்
தனது அன்பு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் 
மொட்டை மாடியில் உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு கலிமா மொழிந்தவர்களாக நின்று கொண்டு
இருக்கிறார்கள்

மலேஷியாவில் இருந்து ஆசை அசையாய் மனைவி பிள்ளைகளைப் பார்க்க வந்த நண்பனுக்கு இப்படியான
ஒரு நிலையில் அவர்களைப் பார்ப்பது ஏதோ கனவு
போன்று இருந்து இருக்கின்றது.

படகில் வந்தவர்களின் உதவியோடு தன் குடும்பத்தைக்
காப்பாற்றிக் கரை சேர்த்துவிடுகிறான் நண்பன்.
நண்பனின் முழுச் சொத்தும் நீரில் இன்னமும் மூழ்கிக்
கிடக்கிறதாம் ஆனால் அவைகள் குறித்து அவனுக்கு
ஒரு துளிஅளவும் கவலையில்லை.

அவனது மனைவி, பிள்ளைகள் என்ற அவனது விலை
மதிக்க முடியாத சொத்துக்களை அல்லாஹ் அவனுக்கு
பாதுகாத்துக் கொடுத்திருக்கிறான்

அல்லாஹ் போதுமானவன்

1 comment:

  1. அல்ஹம்துளிலாஹ்..... மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்ச்சி. நன்றி

    ReplyDelete

Powered by Blogger.