மடவளை தேசிய பாடசாலையில் கூழ் முட்டை வீச்சு - பொலீசார் நிலைமையை கட்டுப்படுத்தினர்
-JM.Hafeez-
கண்டி மடவளை தேசிய பாடசாலையில் (24.5.2016) கூழ் முட்டை வீச்சுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றது. நண்பகல் இடம் பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
கல்லூரியின் அதிபர் செல்வி நூருல் ஹிதாயா தலைமையில் பெற்றோர்களுடனான சந்திப்பொன்று அஸ்ரப் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதற்கு பாடசாலைப் பெற்றோர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அக்கூட்டத்தில் ஆசிரியை ஒருவர் உரையபற்றிக் கொண்டிருக்கும் போது ஒருவர் குறுக்கீடு செய்த போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்;ளது. அச்சமயம் மேடையை நோக்கி கூழ் முட்டைகள் வீசப்பட்டுள்;ளன.
ஆனால் அதிஸ்டவசமாக எவருக்கும் முட்டைகள் படவில்லை. அதன்பின் அங்கு பாரிய சத்தத்துடன் கூக்குரல் சத்தம் கேட்டது. உடனடியாக விரைந்த பொலீசார் நிலைமையைக்கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆண்களும் பெண்களுமாக பாரிய அங்கு கபளீகரத்தை ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன் அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி பாரிய ஆர்பாட்டம் ஒன்றும் இடம் பெற்றது. அதே நேரம் அதிபருக்கு ஆதரவான ஒரு குழுவும் எதிரான ஒரு குமுவும் பணிப்போர் நடத்தியதில் ஏற்பட்ட விளைவே அமடமுட்டை வீச்சு விவகாரமாக இருக்கலாம் எனப் பொதுமக்கள் கருத்து வெளியிட்டனர். வத்துகாமம் பொலீசாரும் வத்துகாமம் வலய கல்விக் காரியாலயமும் விசாரணைகளை நடத்து கின்றன. தற்போது நிலைமை சுமுகமடைந்துள்ளது.

This incident will destroy your school's goodwill.
ReplyDeleteUnity still in plate not in real life.
You people proved it.
Congrats.