Header Ads



கடற்படை அதிகாரி அப்பாவி, ஒட்டுமொத்தப் பிழையும் ஆளுனருடையது - நசீர் அஹமட்


கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் நடவடிக்கைகளினால் தாம் பொறுமையிழந்ததாக மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சம்பூர் மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண ஆளுனரின் நடவடிக்கை காரணமாகவே தாம் ஆத்திரமுற்று அவ்வாறு நடந்து கொண்டதாக நசீர் தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுனர் தமக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை எனவும், அடிக்கடி தமது அதிகாரத்தில் தலையீடு செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் உத்தியோகபூர்வமாக தமது பெயரை நிகழ்ச்சி கூறவில்லை எனவும் ஆளுனர் தம்மை அழைத்த போது தாம் மேடையில் ஏற முயற்சித்ததாகவும் அதன் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் தம்மை தடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் முதலமைச்சர் எனவும் அதற்கான மரியாதையை வழங்குமாறு ஆளுனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கோரியிருந்தால் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும், கடற்படை அதிகாரி அப்பாவி எனவும்,  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னதாக தாம் கிண்ணியாவில் ஓர் நிகழ்ச்சியில் ஆளுனருடன் பங்கேற்றிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சம்பூர் நிகழ்ச்சிக்கு ஹெலிகொப்டர் மூலம் செல்வது குறித்து கேட்ட போது ஹெலிகொப்டரில் இடமில்லை எனவும் நிகழ்ச்சி முடிவடையும் வரையில் இருக்காது முன்கூட்டியே தரைவழியாக சம்பூர் செல்லுமாறும் ஆளுனர் பணிப்புரை விடுத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சம்பூர் சென்று காத்திருந்ததாகவும் ஆளுனரும் அமெரிக்கத் தூதுவரும் ஹெலிகொப்டரில் வந்திறங்கியதாகவும், தமது பெயரை நிகழ்ச்சியில் அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அனைத்திற்கும் ஆளுனரே பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தின் முதலமைச்சருக்கு மரியாதை வழங்கப்படாத நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவா குறிப்பிட்டுள்ளார். மாகாணத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. But you should have behaved in a responsible manner whatever the situation is. Not act like an uneducated rowdy politician as they always do in the parliament. There were students and a foreign diplomat on the stage. Don't you know how to handle anger as a Muslim??

    ReplyDelete
    Replies
    1. Yes even he was a Muslim never acct like that

      Delete
  2. What kind of a donkey CM is this? He not only makes donkey talk in front of a foreign diplomat and gives donkey of an excuse. If he felt that protocols were breached there are ways to address them. For the way defense officer was treated, the Defense Minister - The Executive President should remove him from his post. His party also should take action against this donkey and remove him from any responsibilities for a considerable period of time.
    Also the defense officers and police officers should refrain from participating in functions where this donkey is present till he publicly apologizes the officer concerned in particular and the forces in general.
    Over to you, Excellency The President.

    ReplyDelete
  3. அந்நிய மதத்தை சேர்ந்த பெரும் தலைவர்கள் தவறுகள் செய்யும் அதிகாரிகளை எவ்வாறு மன்னித்து விடுகிறார்கள் என்ற பொதுவான அறிவு கூட இல்லாமல் இவ்வலவு வயதான ஒரு முஸ்லிம் மன்னிக்கும் தன்மையை இஸ்லாமிய வழிபாட்டை நோக்காமல் திடீர் என்று கோபம் காட்டி திட்டுவது எந்தவகையில் நியாயம்.அதிகாரப்பெருமை,ஆணவம் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மூல அமைச்சர் புரிந்தால் நல்லது .

    ReplyDelete
  4. ஆளுநர் பக்கத்திலதானே நின்றார், கோபத்தில கண்ணிருட்டிடுச்சிப் போல, அதுதான் கடற்படை அதிகாரியை இழிச்சவராப் பார்த்திருக்காரு.

    ReplyDelete
  5. He behaved like a CM- Cheap Minister

    ReplyDelete

Powered by Blogger.