அட்டாளைச்சேனையில் விஷேட மார்க்க சொற்பொழிவு
(ஏ.எல்.ஜனுவர்)
புனித றமழானை வரவேற்கும் முகமாக அட்டாளைச்சேனை மஸ்ஜிதுர் றவஹா பள்ளிவாசல் ஏற்பாடு செய்துள்ள விஷேட மார்க்க சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2016.05.26 (வியாழக்கிழமை) அஸர் தொழுகையை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
மறுமைதான் நமது இலக்கு, சுவர்க்கத்தை நோக்கிய குடும்ப வாழ்க்கை எனும் தலைப்பில் அஷ்ஷெய்க், அல்ஹாபில் எப்.பிர்தௌஸ் (யூசுபி) (பேஷ் இமாம், பெரிய பள்ளிவாசல், பொலநறுவை) அவர்களினால் நிகழ்த்தப்பட உள்ளது.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே நாம் அனைவரும் இந்நிகழ்வில் பங்குபற்றி முழுமையான தெளிவையும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் பெறுவோமாக, வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் தீணுல் இஸ்லாத்தின் படி வாழ்ந்து அதே நோக்கில் மரணிப்பதற்கு துணை புரிவானாக, அமீன்.
(பெண்களுக்காக விஷேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது)
Post a Comment