Header Ads



நோன்பு மற்றும் ஸகாத் சம்பந்தமான விஷேட பத்வா சேவை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கீழ் இயங்கி வரும் 15 பிரிவுகளில் பத்வாப் பிரிவு முக்கிய இடத்தை வகிக்கின்றது. இப்பிரிவின் மூலம் மக்களுக்கு நாளாந்தம் ஏற்படும் மார்க்க சம்பந்தமான சந்தேகங்களுக்கான தெளிவுகள் எழுத்து மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். சிலர் நேரடியாக சமுகமளித்து தமக்கு ஏற்படுகின்ற மார்க்க சம்பந்தமான பிரச்சினைகளுக்கான தெளிவுகளைக் கேட்டறிந்து வருகின்றனர்.

மேலும், எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு எமது பத்வாப் பிரிவின் மூலம் ஸகாத் மற்றும் நோன்பு சம்பந்தமான தெளிவுகளை மக்களுக்கு வழங்குவதற்கான விஷேட சேவை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம். கடந்த வருடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இச்சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

எனவே, நோன்பு மற்றும் ஸகாத் சம்பந்தமான தெளிவுகளைப் பெற விரும்புவோர் பின்வரும் எமது பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

துரித இலக்கம் : 0117-490420
மின் அஞ்ஞல்     :  fatwa@acju.lk

அஷ்-ஷைக் எம்.எம் அஹ்மத் முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

1 comment:

  1. It would be more appropriate if you can publish the names, who will be advising this matter. So people can refer to the particular mavlavies.

    ReplyDelete

Powered by Blogger.