Header Ads



'துயர் துடைக்கும் தூய ரமழான்' உதவித் திட்டத்திற்கு 6,500 குடும்பங்கள் விண்ணப்பிப்பு


மேல் மாகாணத்தில் வெ ள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு புனித ரமழான் மாதத்தில் இடையூரின்றி நோன்பு கடமைகளை மேற்கொள்வதற்கு கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் நடைமுறைப்படுத்தியிருக்கும் 'துயர் துடைக்கும் தூய ரமழான்' திட்டத்திற்கு 6 ஆயிரத்தி 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிரு
ந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

வெ ள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டம் கடந்த வியாழக்கிழமை அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு 3 தினங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது. இந்நிலையில் விபரங்களை சேகரிப்பதற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி நேற்றுடன் முடிவடைந்துள்து. இதற்கமைய 6500 மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து கிடைக்கெப்பெற்ற விண்ணப்பங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனி நபர்கள் உள்ளடங்குகின்றனர். 

குறித்த உதவித்ததிட்டத்தின் மூலம் நிதியினை கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் சேகரிக்காது பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான உதவிகளை தனவந்தர்கள் நேரடியாக சென்று மேற்கொள்வதற்கான தகவல்களை வழங்கி இது தரப்பினருக்குமான தொடர்பினை மேற்கொண்டு வருகின்றது. 

இத்திட்டத்தினூடாக உதவிகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கங்கள்: 011-3443199/011-7907838. மின்னஞ்சல்: cddflk@gmail.com 

No comments

Powered by Blogger.