Header Ads



பாராளுமன்றத்தில் நேற்றும், கடும் சர்ச்சை - அந்த பொத்தான் யாருடையது..?

ஐக்­கிய தேசியக் கட்­சியின் களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான பாலித்த தெவ­ரப்­பெ­ரும மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிர­சன்ன ரண­வீர ஆகி­யோருக்கு பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் பங்­கேற்­ப­தற்கு ஒரு­வார கால­தடை விதிக்கப்பட்ட தீர்ப்பால் சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது. 

நேற்று வியா­ழக்­கி­ழமை முற்­பகல் 10.30 மணிக்கு பாரா­ளு­மன்றம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. சபா­நா­யகர் அறி­விப்பின் போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையில் கடந்த மூன்றாம் திகதி இடம்­பெற்ற மோதல் சம்­பவம் குறித்த விசா­ரணை அறிக்­கையின் தீர்ப்பை வழங்­கு­வ­தற்­கான பிரே­ர­ணையை முன்­வைக்­கு­மாறு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்­லவைக் கோரினார்.

இதன்­போது சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல ஐ.தே.க. பாரா­ளுமன்ற உறுப்­பி­னரும் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான பாலி­த ­தெ­வ­ரப்­பெ­ரு­மவை ஒரு­வா­ர­கா­லத்­திற்கு பாரா­ளு­மன்­ற­ அமர்­வு­களில் பங்­கேற்­ப­தற்கு ­தடை விதிக்கும் பிரே­ர­ணையை முன்­வைத்து சபையின் அங்­கீ­கா­ரத்தைக் கோரினார்.

அதற்­கான அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­ட­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு எம்.பி.யான சந்­தி­ர­சிறி கஜ­தீர பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உங்­களை (சபா­நா­ய­கரை) விழித்தே தமது கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர். உங்கள் மீது நம்­பிக்கை வைத்­துள்­ளனர். அவ்­வா­றி­ருக்­கையில் விசா­ரணை அறிக்­கையை வேறொரு குழு­வினர் விசா­ரித்­துள்­ளனர் என்­பதை சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் சிரேஷ்ட உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி.யின் பெயரும் அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. விசா­ரணை அறிக்கை தொடர்­பான நம்­பிக்­கை­யின்மை எமக்கு எழு­கின்­றது என்றார்.

இதன்­போது பிர­தி ­ச­பா­நா­யகர் திலங்க சும­தி­பால மற்றும் குழுக்­களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் கொண்ட குழு­வினை நானே விசா­ர­ணைக்­காக தெரிவு செய்தேன். அவர்கள் மீது எனக்கு முழு­மை­யான நம்­பிக்­கை­யுண்டு. இந்த சபையை வழி­ந­டத்­து­ப­வர்கள் நியா­ய­மா­கவும் நடந்­தி­ருக்­கின்­ற­மையை நீங்­களே அறி­வீர்கள் என சபா­ய­நா­யகர் கரு ஜய­சூ­ரிய சுட்­டிக்­காட்­டினார்.

அது­மாத்­தி­ர­மன்றி குறித்த சம்­பவம் இடம்­பெற்­ற­போ­துதான் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி.யை பல தட­வைகள் எச்­ச­ரித்­தி­ருந்தேன் என்­ப­தையும் சபா­நா­யகர் குறிப்­பிட்­டுக்­காட்­டினார்.

அதன்­போது குறுக்­கிட்ட எதிர்க்­கட்­சியின் பிர­தம கொர­டாவும் ஜே.வி.பியின் தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, இந்த விசா­ர­ணையில் அர­சியல் சார்புத் தன்மை இருக்­கலாம் என்ற அச்­சத்தை பலர் கொண்­டி­ருக்­கலாம். ஆகவே சபையில் இடம்­பெற்ற விட­யங்கள் அனைத்­துமே ஒளி, ஒலி, மூலம் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. அவற்றை ஊட­கங்­க­ளுக்கு வழங்­குங்கள். அதன் மூலம் நாட்டு மக்­களும் அதனைப் பார்த்து யார் என்ன செய்­தார்கள் என்றும் அறிந்து தீர்­மானம் எடுப்­பார்கள் என்றார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் இதனை இரு­த­ரப்பின் தனிப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு இடை­யி­லான விட­ய­மா­கப்­பார்க்­காது முழுச்­ச­பையின் கண்­ணியத் தன்­மையைக் கருத்தில் கொண்டு நோக்க வேண்டும்.

குறித்த தீர்­மானம் கட்சித் தலை­வர்கள் மட்­டத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆகவே இந்த சபையின் கண்­ணி­ய தன்­மையை பாது­காப்­ப­தற்­காக இந்தத் தீர்­மா­னத்தை நெகிழ்­வுத்­தன்­மை­யுடன் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அவ­சியம் ஏற்­பட்டால் அது குறித்து கலந்­து­ரை­யா­டலாம் என்றார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், இவ்­வாறு உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் மோதல் சம்­பவம் இடம்­பெற்­றமை துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். அவ்­வா­றான சம்­பவம் இடம்­பெற்­று­விட்­டது. இந்த விட­யத்தை இத்­துடன் முடி­வுக்கு கொண்­டு­வ­ர­வேண்டும். இந்த சபையின் கண்­ணி­யத்­தன்­மைக்கு பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. பாரா­ளு­மன்ற குழு­கூட்­டத்தில் கட்­சித்­த­லை­வர்­க­ளி­டையே இது தொடர்பான அறிக்கை குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது. ஆகவே மீண்­டு­மொரு தடவை இவ்­வா­றான சம்­பவம் நிக­ழாது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இந்த தீர்­மா­னத்தை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ர­கூட்­ட­மைப்பின் மஹிந்த ராஜபக் ஷ ஆத­ர­வணி எம்.பி.யான பந்­து­ல­கு­ண­வர்­தன என் மீதும் தினேஷ், பிரி­யந்த சாந்த எம்.பிக்கள் மீதும் அநா­க­ரி­க­மாக செயற்­பட்­ட­தாக ஒரு குழு­வி­னரால் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. 1983 ஆம் ஆண்டு முதல் இந்த சபையை தினேஷ் குண­வர்த்­தன பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்றார். அவர் பொறுப்­புடன் செயற்­ப­டு­கின்றார். அவ்­வா­றி­ருக்­கையில் இவ்­வா­றான குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 1989 இல் வாசு­தேவ நாணயக்­கா­ர­வுக்கு நடந்த சம்­ப­வத்தை நீங்கள் (சபா­நா­யகர்) அறி­வீர்கள். இது திட்­ட­மிட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றது எனக்­கூ­றி­ய­போது குறுக்­கீடு செய்த சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய எனக்கு அந்த வர­லா­றுகள் நன்கு தெரியும் எனக் கூறி­ய­துடன், நீங்கள் அம­ருங்கள் என பணித்தார். அத்துடன் மற்­றொரு மஹிந்த ராஜபக் ஷ அணியின் எம்.பி.யான மகிந்த யாப்பா அபே­வர்த்­த­ன­வுக்கு பேசு­வ­தற்கு சந்­தர்ப்­பத்தை வழங்­கினார். இதன்­போது குறித்த சம்­பவம் இடம்­பெற்று 48 மணி­நே­ரத்தின் பின்­னரே விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கின்­றீர்கள்.

அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென மகிந்த யாப்பா அபே­வர்த்­தன எம்.பி. குறிப்­பிட்டார். இதன் போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு எம்.பி.யான பிர­சன்ன ரண­வீ­ரவுக்கு ஒரு­வார காலம் பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் பங்­கேற்­ப­தற்­கான தடை­வி­திக்கும் பிரே­ர­ணையை சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷமன் கிரி­யெல்ல முன்­வைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக் ஷ அணி எம்.பி.க்கள் கடு­மை­யான எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­ட­போதும் அதனை சபை அங்­கீ­க­ரித்து நிறை­வேற்­றி­யது.

மீண்டும் ஜே.வி.பி.யின் தலை­வரும் எம்.பி.யுமான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க குறித்த உறுப்­பி­னர்கள் தொடர்பில் கட்­சித்­த­லை­வர்கள் எவ்­வா­றான நிலைப்­பா­டு­களைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தற்­கான விதைப்­பு­ரை­களை முன்­வைக்க வேண்டும் எனக்­கோ­ரினார். இச்­ச­ம­யத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியின் புதல்­வரும் ஐ.ம.சு.கட்­சியின் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜபக் ஷ குறித்த விசா­ரணை அறிக்­கை­யா­னது இன்று (நேற்று) ஊட­கங்­களில் வெளி­வந்­துள்­ளது. உங்­களால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்கை எவ்­வாறு ஊட­கங்­க­ளுக்குச் சென்­றது. இவ்­வாறு உங்­க­ளுக்கும் சபா­நா­ய­க­ருக்கும் தெரி­யாது ஊட­கங்­க­ளுக்கு அறிக்­கைகள் செல்­வது உங்­களை (சபா­நா­ய­கரை) அகெ­ள­ர­வப்­ப­டுத்தும் செயற்­பா­டாகும் எனக் சுட்­டிக்­காட்­டினார். அதன்­போது சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய அதனைக் கவ­னத்தில் எடுப்­ப­தாகக் கூறினார்.

இத­னை­ய­டுத்து சபைக்குள் பிர­வே­சித்த விமல் வீர­வன்ச எம்.பி. பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பா­ல­வுக்கு எதி­ராக தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. ஏற்­க­னவே வழக்­கொன்றைத் தாக்கல் செய்­துள்ளார். அத்­துடன் ஹோம­ாகம பகு­தியின் அமைப்­பாளர் பத­வியையும் திலங்க சும­தி­பால விரும்­பு­கின்றார். அந்­நி­லை­யிலேயே தினேஷ் எம்.பி. மீதான குற்­றச்­சாட்டை முன்­வைத்து அறிக்கை வெளி­யிட்­டுள்ளார் எனக் குறிப்­பிட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த நாமல் எம்.பி.குறித்த விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்ட போது குற்­றச்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளிடம் எவ்­வி­த­மான கருத்­து­களும் பெற்­றுக்­கொள்ள வில்லை. அவ்­வா­றான நிலையில் இவ்­வி­சா­ரணை அறிக்­கையை எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடியும் எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அதனைத் தொடர்ந்து மற்­றொரு மஹிந்த ஆத­ரவு அணி எம்.பி.யான சிசிர ஜெயக்­கொ­டியும் விசா­ரணை அறிக்கை தொடர்­பா­கவும் தினேஷ் குணவர்த்தன எம்.பி.மீதான குற்றச்சாட்டு தொடர்பாகவும் கடுமையான தொனியில் கருத்துக்களை வெளியிட்டார். இச்சமயத்தில் அமைச்சர் தயாசிறி ஜெயகேசர எழுந்து இந்தப்பிரச்சினையையும் உங்களின் (சபாநாயகரின்) தீர்மானத்தையும் விமர்சிப்பதற்கு இடமளிக்க வேண்டாம். இதுவரையில் எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறான இடமளிப்புக்களைச் செய்யவில்லை. சபாநாயகரின் தீர்மானமே இறுதியானது. ஆனால் நீங்கள் மட்டும் தான் இவ்வாறு கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் நெகிழ்வுத்தன்மையை பயன்படுத்தி குறித்த விடயத்தைவிவாதிக்கப் பார்க்கின்றனர். அது தவறானதாகும். அதற்கு இடமளிக்காதீர்கள் எனக் கூறினார். இதனையடுத்து குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. அத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரிய சம்பவம் தொடர்பான தீர்ப்பு நாளை (இன்று) வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்றார்.

2

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையில் சபையில் இடம்­பெற்ற மோத­லின்­போது கழன்று விழுந்த பொத்தான் யாரு­டை­ய­தென கண்­ட­றி­வ­தற்கு அனைத்து உறுப்­பி­னர்­களும் ஒத்­து­ழைக்க வேண்­டு­மெனக் கோரிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் துஷார எம்.பி. உரி­மை­யாளர் யார் என்­பதை கண்­ட­றி­வ­தற்­காக அந்த பொத்­தானை சபையில் சமர்ப்­பித்தார்.

அத்­துடன் குறித்த பொத்தான் யாரு­டை­யது எனக் கண்­ட­றிந்து நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் எதிர்­கா­லத்தில் பொத்தான் பல்­லாக அல்லது கையாக மாறும் நிலை­மையும் ஏற்­ப­டலாம் எனவும் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற நுண் நிதி­ய­ளிப்பு சட்ட மூலம் மீதான இரண்டாம் மதிப்­பீட்டு விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது;

என்­னி­ட­மொரு மேற்­சட்டை பொத்தான் உள்­ளது. அந்த பொத்தான் இந்த சபை­யி­லி­ருந்து தான் எடுக்­கப்­பட்­டது. இந்த பொத்­தானின் உரி­மை­யாளர் யார் எனச் சபையில் கோரினார்.

இதன்­போது மஹிந்த ராஜபக் ஷ ஆத­ரவு அணியின் எம்.பி.யான சந்­தி­ர­சிறி கஜ­தீர ஒழுங்கு பிரச்­சி­னையை எழுப்பி குறித்த பொத்­தானை சபையில் சமர்ப்­பிக்­கு­மாறு கோரினார். அதன்­போது குறித்த பொத்­தா­னுக்­கு­ரிய உறுப்­பினர் யார் என்­பதை கண்­ட­றிந்து தாருங்கள் எனக் கூறி சபையில் பொத்­தானை துஷார எம்.பி. சமர்ப்­பித்து தனது உரையை முடித்தார்.

அச் சமயத்தில் சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் குணசேகர கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இப்பொத்தான் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.