Header Ads



பலஸ்தீனர்களின் கல்வித் தாகம்


-சுவனப் பிரியன்-

எத்தனை கொலைகள்: எத்தனை குண்டு வெடிப்புகள் எத்தனை காயங்கள்: எத்தனை வீடு இடிப்புகள்: அனைத்தையும் தங்களின் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி இடிந்த பள்ளி அறையிலும் ஆர்வத்துடன் கல்வி கற்கும் பாலஸ்தீன மக்களிடம் நமக்கும் பாடம் இருக்கிறது. இத்தனை தோல்விகள் கண்டும், அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பாவும் வஞ்சகமாக பாலஸ்தீனியர்களை பழி வாங்கினாலும் கிடைக்கும் சந்தர்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் பாலஸ்தீனியர்கள்.

தோற்றத்திலும் நிறத்திலும் நம் ஊர் பார்பனர்களை ஒத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எப்பாடு பட்டாவது ஒரு டிகிரி எடுத்து விடுவார்கள். கல்வி கற்பதை அந்த அளவு நேசிப்பர். அதிகமாக அலுவலக வேலைகளையே விரும்புவர். சவுதியில் பல பாலஸ்தீனியர்களை நண்பனாக பெற்றவன். பழகுவதற்கு மிக இனிமையானவர்கள். மிக தைரியசாலிகள்: பெண்களும் ஆண்களுக்கு நிகராக படிப்பதிலும், வேலை வாய்ப்பை பெறுவதிலும் போட்டி போடுவர். அதே வேகத்தில் தொழுகையிலும் மிக கவனமாக இருப்பர்.

தோல்விகளையும் சிரமங்களையுமே வாழ்க்கையாக கொண்டுள்ள இந்த மக்களின் வாழ்வில் வசந்தம் வீச நம்முடைய பிரார்த்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

'என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!

குர்ஆன் 20:114

No comments

Powered by Blogger.