Header Ads



தந்தையின் பாதுகாப்பை அகற்றியதன்மூலம், அரசாங்கம் முக்கிய செய்தியொன்றை சொல்லியுள்ளது

அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ச அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

ஏனைய அதிகாரிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாத காரணத்தினால் மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பை நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ச என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறந்து விட்டார்.

இறுதிக் கட்ட போரின் போதும் மஹிந்தவிற்கு குறித்த இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கியிருந்தனர் .இந்த இராணுவ உத்தியோகத்தர்கள் சிறந்த பயிற்சி பெற்றுக்கொண்டவர்களாவர்.

இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் முக்கிய செய்தி ஒன்றை சொல்லியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் மஹிந்தவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது என நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

1 comment:

  1. அடேய் மாங்கா மடையா பயங்கர வாதத்தை இல்லது ஒழித்த , பயங்கர வாதத்தை இல்லது ஒழித்த என்று ஒவ்வொரு நாளும் தாரக மந்திரமாக சொல்லிக்கொண்டே இருக்கின்றீர்கள் உண்மைதான் . அப்படியாயின் ஏன் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு . பயங்கரவாதம் இல்லாவிட்டால் ஏன் அதற்கு பயப்படவேண்டும் . மக்களின் பணத்தை உண்டு பழகியவர்களுக்கு எப்போதும் அதை உன்னதான் வேண்டும். வீண் பகட்டும் வீண் அஹங்காரமும் இதுதான் இவர்களுக்கு தேவை நாடு எப்படி போனாலும் இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.