தூக்கம் குறைந்தால், மார்பகப் புற்றுநோய் வருமா..?
எட்டு மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என, வாஷிங்கடன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
21, 230 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில், வேலைப்பளு காரணமாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், தூக்கத்தின்போது குறட்டை விடுவது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும், ஒரு வாரத்தில் 5 மணிநேரத்துக்கும் குறைவாகத் தூங்கும் அளவுக்குப் பிரச்னை உள்ள பெண்கள், புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள, வாஷிங்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் பொதுவாழ்வு அமைப்பின் நேத்தியனியல் வாஸ்டன், தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது மார்பகப் புற்றுநோய் மட்டுமல்ல, பிற நோய்களுக்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்.

Post a Comment