இராஜாங்க அமைச்சர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் - மைத்திரி, களத்தில் இறங்கிய ரணில்
இராஜாங்க அமைச்சர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பில் அமைச்சரவையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் -24- அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது தமக்கு அதிகாரங்கள் கிடைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர்கள் குற்றம் சுமத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சில இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனங்கள், அலுவலகங்கள், உத்தியோகத்தர்கள் வழங்கப்படவில்லை என முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரவைக் கூட்ட நிறைவின் பின்னர் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இராஜாங்க அமைச்சர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி வசதிகள் உண்டா என தனித்தனியாக விசாரித்துள்ளார்.

Post a Comment