மல்வானையில் நடைபெற்ற, விரும்பத்தகாத நிகழ்வு
-முஹம்மது நியாஸ்-
காத்தான்குடியில் இருந்து சுமார் பன்னிரண்டு இலட்சத்தி இருபதாயிரம் ரூபாய்கள் பெறுமதியான நிவாரணப்பொருட்களுடன் மல்வானை பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினை மல்வானையை நெருங்கும் வழியில் அங்கே மீட்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் "நீங்கள் ஏதாவது பிரதேசங்களுக்கு செல்லவேண்டியிருந்தால் வாருங்கள் நாங்கள் உங்களை அழைத்துச்செல்கிறோம்" என்று மிகவும் வரவேற்புடன் வாக்களித்துள்ளார்கள்.
அவர்களைக்கடந்து சற்று தூரம் சென்றபோது மஸ்ஜிதுன் நபவிய்யா இளைஞர் இயக்கம் என்னும் ஒரு குழுவினரால் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினர் வழி மறிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு வழிமறித்த குழுவினர் நிவாரணத்திற்காக நீங்கள் கொண்டுவந்திருக்கின்ற பொருட்களை தங்களிடம் தருமாறும் அப்பொருட்களை தாங்களே உரிய பிரதேசங்களுக்கு கொண்டு விநியோகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் பொருட்களை கொண்டு சென்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் சகோதரர்கள் "முதலில் நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களை அடையாளம் காணவேண்டும். அத்தோடு இந்த பொருட்களை எங்களுக்கு வழங்கியவர்கள் நீங்களே உங்களுடைய கைகளால், உங்களுடைய மேற்பார்வையின் கீழ் வழங்கிவிட்டு வாருங்கள் என்று எங்களிடம் அமானிதமாக ஒப்படைத்துள்ளார்கள். உங்களால் முடிந்தால் நீங்களும் எங்களோடு கூட வந்து பாதிக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்துங்கள்" என்று கூறியுள்ளனர்.
இதைக்கேட்ட அந்த குழுவோ "அவ்வாறில்லை, இந்தப்பிரதேசத்தில் நாங்கள் ஒரு முறைமையினூடாக நிவாரணங்களை வழங்கி வருகிறோம், எனவே நீங்கள் எங்களிடமே பாரமளிக்க வேண்டும்" என் விடாப்பிடியாக வற்புறுத்தியுள்ளது. ஆயினும் இந்த வெள்ள நிவாரணத்தின்போது ஏற்பட்டுள்ள சில முறைகேடுகள் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டு அது தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் யாருமே தாங்கள் கொண்டு சென்ற பொருட்களை யாரிடமும் ஒப்படைக்காமல் நேரடியாக ரக்ஷபான பெரிய ஜும்ஆ பள்ளிவாயிலை சென்றடைந்துள்ளனர்.
குறித்த ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயிலைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு தப்லீக் ஜமாஅத்தின் ஆளுகைக்குட்பட்ட பள்ளிவாயிலாக இருந்தபோதிலும் அப்பள்ளிவாயிலுடைய நிருவாகத்தினர் கொள்கைரீதியான எதுவித பாகுபாடுகளையும் வெளிக்காண்பிக்காமல் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினுடைய நிவாரணக்குழுவை மிகுந்த மரியாதையுடனும் சகோதர வாஞ்சையுடனும் வரவேற்று உபசரித்துள்ளனர்.
அந்த ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாகிகளுடைய உதவியோடுதான் அப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கும் நூற்றுக்கும் அதிகமான சிங்கள குடும்பங்களுக்கும் நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் விஜய மாவத்தை என்னும் பகுதியிலும் நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இந்த நிவாரணப்பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கையளிக்கப்படதன் பின்னர் மல்வானை பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் நாற்புறமும் நீரால் சூழப்பட்டு ஒரு குட்டித்தீவாக மாறிப்போய்விட்ட காந்திவெவ என்னும் பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அப்பகுதிக்கு குறிப்பிடத்தக்க அளவில் எந்தவொரு நிவாரண உதவியும் சென்றடையவில்லை என்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் காந்திவெவ பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தங்களுடைய உதவிகளை மேற்கொள்ளும் நோக்கில் இருள் சூழத்தொடங்கிய மஃரிப் நேரம் ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாகத்தை சேர்ந்த சில நிருவாகிகளுடன் வள்ளங்களில் செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்தப்போதுதான் குறித்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே மல்வானையை நெருங்கும்போது தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவிடம் பொருட்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த நபவிய்யா இளைஞர் இயக்கம் என்னும் குறித்த அந்த காடையர் கூட்டம் தற்போது நிவாரணக்குழு வள்ளங்களில் செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கின்ற இடத்திற்கு வந்து சேர்ந்து காந்திவெவ பகுதிக்கு செல்லவிடாமல் தடுத்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் காந்திவெவ பகுதி நிலவரத்தை எடுத்துக்கூறியும் இந்த நிவாரணத்தினுடைய அவசியப்பாட்டை விளக்கியும் அக்காடையர் கூட்டம் அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காது தகராறு செய்வதிலேயே குறியாக இருந்துள்ளது.
இந்தத்தகராறுக்கு குறித்த காடையர் கூட்டம் முழுக்க முழுக்க கபுறு வணக்க சித்தாந்தத்தில் ஊறித்திளைத்த கூட்டம் என்பதும், ஏற்கனவே தேசிய தௌஹீத் ஜமாஅத்திடமிருந்து பொருட்களை கையகப்படுத்தும் தமது முயற்சியில் ஏற்பட்ட தோல்வியின் வெளிப்பாடுமே காரணம் என அப்பிரதேசவாசிகளாலேயே கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கும்பல் காலி, பேருவலை போன்ற பிரதேசங்களில் இருந்து மல்வானை பகுதிக்கு வந்து சேர்ந்த காடையர் கும்பல் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ஆத்திரமடைந்த அந்த காடையர் கும்பல் தமது வன்முறையின் முதற்கட்டமாக தௌஹீத் இயக்கங்களை தூற்றியவாறே தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரண லொறியில் முன்பக்கமாக கட்டியிருந்த விளம்பர பேனரை கிழித்து வீசியுள்ளது.
இதன் போது பொறுமைகாத்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினர் அந்த சந்தர்ப்பத்தில் திடீரென பெய்த மழையின் காரணமாக லொறிக்குள் ஏறி கீழ்த்தட்டை இழுத்து மூடியுள்ளனர். அப்போது கீழே நின்றுகொண்டிருந்த அக்காடையர் கும்பல் குப்பை வாரியொன்றை வீசிஎறிந்ததில் லொறிக்குள் இருந்த MSM. அஜ்வத் என்னும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தை சேர்ந்த உறுப்பினருக்கு கையில் இலேசான வீக்கமொன்று ஏற்பட்டதுடன் மேலும் ஒரு கண்ணாடி போத்தலொன்றை அக்காடையர் கும்பல் வீசியபோது அது தலையில் பட்டு இலேசான வீக்கமொன்றும் அதே சகோதரருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு கனமான பொருள் ஒன்றை அக்காடையர் கூட்டம் தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களை நோக்கி வீசிய போது அது லொறியில் பட்டு திரும்பி அலாவுதீன் என்னும் ஓர் உறுப்பினருடைய கண்ணுக்கு அருகில் சிறிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
காடையர் கூட்டத்தின் வன்முறைகள் எல்லைகடந்து செல்லவே லொறிக்குள் அகப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழு மிகப்பாரியதொரு உயிரச்சுறுத்தலை உணர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சிலர் ஒன்றுகூடி காடையர் கும்பலை கட்டுப்படுத்த முயற்சித்தும்கூட முடியாமல் போகவே காந்திவெவ பகுதிக்கு செல்வதற்காக தேசிய தௌஹீத் ஜமாஅத் எடுத்த முயற்சி கைவிடப்பட்டது. அத்துடன் எப்படியாவது அவ்விடத்தை விட்டும் வெளியேறி உயிரை பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்த நிலையை உணர்ந்ததால் மல்வானையை விட்டும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அவசரமாக வெளியேறியது.
அதன் பின்னர் அப்பகுதியிலிருந்து வெளியேறி கொழும்பை நோக்கிச்செல்வதற்காக வரும் வழியில் பூகொட பிரதேசத்தில் உள்ள ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயில் நிருவாகிகளுக்கு அறிமுகமான முஸ்லிம் சகோதரர்களிடத்தில் மீதமிருந்த நிவாரணபொதிகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சரியாக இனங்கண்டு ஒப்படைக்குமாறு அமானிதமாக கையளித்துவிட்டு தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணக்குழுவினர் கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.
இதுதான் நேற்றையதினம் காத்தான்குடியிலிருந்து வெல்ல நிவார உதவிக்காக மல்வானை பிரதேசத்திற்கு சென்ற தேசிய தௌஹீத் ஜமாஅத் அங்கே சந்தித்த பிரச்சினைகளின் சாராம்சமாகும்.
இந்த அறிக்கையானது தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைமைப்பிரச்சாரகரும் குறித்த நிவாரணப்பணியில் தலைமை வகித்தவருமான மௌலவி அல் ஹாபிழ் MCM. ஸஹ்றான் (மஸ்ஊதி) தொலைபேசியூடாக என்னிடம் பிரத்தியேகமாக வழங்கிய தகவல்களில் இருந்தே தொகுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதவிர ரக்ஷபான பெரிய ஜும்ஆ பள்ளிவாயிலுடைய ஆலோசனையை மதிக்காமல் தன்னிச்சையாக, வீடு, வீடாக கொண்டு சென்று நிவாரண பொதிகளை கையளித்ததால்தான் பிரச்சினை ஏற்பட்டது என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்பதையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மேலும் அவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மறுப்பறிக்கையாக தற்போது ரக்ஷபான ஜும்ஆ பள்ளிவாயில் ஊடாகவே உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்த சம்பவத்தை பொறுத்தவரைக்கும் இன, மத பேதங்களை கடந்து காத்தான்குடியில் இருந்து பல இலட்ச ரூபாய்கள் பெறுமதியான நிவாரணப்பொருட்களுடன் மனிதாபிமான உதவிக்காக சென்ற சகோதர்களை இஸ்லாமியர்கள் என்று தமக்குத்தாமே கூறிக்கொள்கின்ற சில ஈனப்பிறவிகள் மேற்கொண்ட இழிசெயல்தான் என்பது இங்கே மிகத்தெளிவாகவே அடையாளங்காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்நாட்டில் எரிந்துகொண்டிருக்கின்ற இனவாதத்தீயை இவ்வாறான அனர்த்தங்களின் போது மேற்கொள்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகள் மூலமாகவேனும் தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மிகப்பாரிய முயற்சிகள் சில மனிதநேயமும் சமுதாய அக்கறையுமற்ற இஸ்லாமிய பெயர்தாங்கிகளால் இடைநடுவில் கை நழுவிப்போய் விடுகின்றன என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுகொண்டேதான் ஆகவேண்டும்.

எல்லா அமைப்புக்களையும் விமர்சித்துகொண்டும் பகைத்துக் கொண்டும் இருக்கும் இந்த தௌஹீத் ஜமாத் RCC யினுடைய அறிவித்தலை மதிக்காமல் தாமே நேராக பாதிக்கப்பட்ட இடத்தில் ஹீரோயிசத்தை காட்ட முற்பட்டிருக்கிறது.
ReplyDeleteநிவாரணங்களை RCC யின் coordination உடன் வழங்குமாறு ACJU ஆலோசனை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது
These ntj only want to take photos by giving 3 or 4 food pkts and panadol card. They Only need publicity. Last 7 to 8 days flood situation was properly handled and managed by nabaviyyah group and still they put all the effort after flood situation. And all these nth was doing in malwana was insulting and discouraging the relief workers who were giving their maximum to secure the people and their belongings last 8 days. Who wants to let discourage these kind of relief workers because of cheap minded show off ntj idiots. As malwanians we dont want that and we dont need photo maniac plonkers in the flood field. Only need honest workers to work only expecting allahs satisfaction and these situations need to be managed properly to prevent duplication and corruption which nabaviyyah group was perfectly doing. We dont wanted that to be spoiled by any one. We know well to help our malwanians and secure our makwanians. You guys jaffna muslim in media better know what a neutral media is. So think wise before publish anything.
ReplyDeleteI would say don't crate a internal conflict with the Muslim people . Rather leve them on there own. Allah look at the hart of the doer not the publicity.
ReplyDeleteHasan what did you do for these people you did nothing. why this comment? Only comment why da.do you know those people heart..some time need publicity keep it or you go on the spot do anything without publicity keep it.
ReplyDeletetharuda kadayar mind your words ok.there is limit for everything.don't publish like this.
ReplyDeleteI would like to remind you read the article already published on
ReplyDelete" DID YOU SPLIT THEIR HEART and SEE THEIR INTENTION?"
Only Allah Knows every one of our's intention, Allah will reward as per it. We are not take the KNOWLEDGE OF Allah in our hand to READ predict the intention of others. LET EVERY ONE INVOLVE IN THE AID WORK.
Beettil irunthu comments pannathe oru Panadol aavathu kondu spot kku poanka.did u get dialog free 100 rupees? So u r doing comments.don't you have any work?
ReplyDeleteRasheed r u mad? How can split heart and see their intention.never keep it.I said Allah knows ok.don't comments leave it ok.do anything those people.
ReplyDeleteஒரு சாராரை காடையர் என்றும் தெ ளஹீத் அமைப்பினை ெதாண்டர்கள் என்றும் கூறியிறுப்பதில் இருந்து கட்டுரை எழுதி இருப்பது காடையர் என்தை விழங்க
ReplyDeleteமுடிகின்றது
உரியவர்களிடம் பொருட்களை ஒப்படைத்தமை சிறந்த செயல்.
ReplyDeleteநபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்கம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதும் இன்னோரது பொருட்களைக் கொண்டு தமக்கு பெயர் எடுக்க எந்த வகையிலும் முயற்சிக்காது என்பதும் மல்வானை ஊரான் என்ற வகையில் நாம் அறிவோம்...... இந்த பெயர் தாங்கி தௌஹீத் காரரின் சமூகப் பணி என்ற பெயரில் ஊர் குழப்பும் ( கபூர் வணங்கி பொன்ற இழி சொல் பாவனை மூலம் இது உறுதியாகிறது ) விடயங்களை விடுத்து முதலில் மனிதர்களுக்குள்ள மரியாதையைக் கொடுக்க கற்றுக் கொள்ளவும்..... தற்போது நபவிய்யா இயக்கம் அனைத்து உதவிகளையும் பாதிக்கப் பட்ட ( சிங்கள முஸ்லிம் பேதமின்றி ) மக்களுக்காக செய்துகொண்டுள்ளது மாஷா அல்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் !!! பாதிக்கப் பெற்ற மக்கள் நல்ல நிவாரணங்களைப் பெற்று சுகம் பெற அல்லாஹ் ரப்பில் ஆலமீனைப் பிரார்ர்த்திக்கிறேன் ......Saheed Lafir - Qatar
ReplyDelete