Header Ads



அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்காக, சுவிஸில் துஆ பிரார்த்தனை

இயற்கை அனர்த்தத்தில் பாதிப்படைந்த இலங்கை முஸ்லிம்களுக்காக இன்று (22) ஆம் திகதி சூரிச் - சிலீரன் பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் பிரதித் தலைவர் மௌலவி  அப்துல் ஹாலிக் இந்த துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அப்துல் ஹாலிக் மௌலவி,

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்காகமுஸ்லிம்களை குற்றம் சுமத்துவதோ அல்லது பாவத்தினால் ஏற்பட்டது என கருத்துக்களை பரப்புவது தவறானது. இந்த அனர்த்தமானது அல்லாஹ்வின் ஏற்பாடு.

இந்தநிலையில் சுவிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய தேசங்களில் வாழும் முஸ்லிம்கள் இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவுவது அவசியமானது. எதிர்வரும் ரமழான் எம்மை எதிர்கொண்டுள்ள நிலையில் அனாதரவாகவுள்ள முஸ்லிம்களுக்கு நாம் வாரி வழங்குவது அவசிமானதெனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவர் அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் சுவிஸ்  முஸ்லிம்களிடம் சேகரிக்கப்பட்ட ஒருதொகை நிதியை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் அப்துல் ஹாலிக் மௌலவி மூலம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.