Header Ads



துருக்கிய அரசியலில் கொந்தளிப்பு, எர்துகானுக்கு இழப்பு, பிரதமர் பதவி விலகல்


-Mohamed Basir-

கட்சியினதும் துருக்கிய அரசாங்கத்தினதும் தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாக துருக்கியப் பிரதமர் தாவூத் ஒக்லூ விடுத்துள்ள அறிவிப்பு அரசியல் களத்தில் ஒரு கொந்தளிப்பை உண்டாக்கிவிட்டிருக்கிறது. அரசியல் ராஜதந்திரியான தாவூத் ஒக்லூவுக்கும் அரசியல் தலைவரான அர்துகானுக்கும் இடையிலான கருத்தொற்றுமையின்மையே இப்பதவி விலகலுக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதன் பின்னணி குறித்து பல்வேறு ஊடகங்கள் அலசியுள்ளன.

தாவூத் ஒக்லூ மிகக் கஷ்டமான சந்தர்ப்பமொன்றில் கட்சியினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பை சுமந்து எடுத்த பொறுப்பை சரிவர நிறைவேற்றியிருக்கிறார். நுணுக்கமான அரசியல் சாணக்கியம் கொண்ட இஸ்லாமியவாதியான பேராசிரியர் ஒக்லூவின் இழப்பு ராஜதந்திரியில்லாமல் துருக்கியை கொண்டு செல்ல அர்துகானை தள்ளிவிட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

அர்துகான் ஆகர்ஷணமிக்க, தலைசிறந்த அரசியல் தலைவர். தாவூத் ஒக்லூ மாபெரும் மூலோபாய சிந்தனையார். துருக்கியினதும் முழு இஸ்லாமிய உம்மத்தினதும் நலனுக்காக இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என ஆசிக்கிறேன் என பிரபல சிந்தனையாளர் முஹம்மத் முஃக்தார் ஷன்கீதி தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் தாவூத் ஒக்லூ தான் பதவி விலகுவது குறித்து அறிவிக்கும் மாநாட்டில் பணிவோடும் உயர்ந்த பண்பாட்டுடனும் பேசினார். அறபு நாட்டு அரசியல் வாதிகள் மட்டுமல்ல எல்லா அரசியல் வாதிகளும் ஒக்லூவிடம் கால்மடித்து கற்க வேண்டும். 

பண்பாட்டின் சிகரம் பேராசிரியர், அரசியல் ஞானி தாவூத் ஒக்லூ ஆற்றியிய உரையின் சுருக்கம் இதோ.

#- எப்போதும் எனது இலக்காக இருந்தது என்னை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும் என்பதே. அடுத்து நாடும் மக்களும் எனது இலக்காக இருந்தனர்.
#- ஏ கே பி கட்சியை காப்பதும் அதன் பெறுமானங்கள், கொள்கைகளை காப்பதும் எனது இலக்காக எப்போதும் இருந்திருக்கிறது.
#- தேர்தல் பிரச்சாரத்தின் போது துருக்கிய மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கட்சி என்ற வகையில் தொடர்ந்தும் உழைப்போம்.
#- ஏ கே பி கட்சியின் அரசாங்கம் தொடர்ந்தும் பலமுடன் இருக்கும்.
#- இவ்வளவு சாதனைகளின் பின்னரும் இன்று எடுத்த தீர்மானம் குறித்து கேள்வி கேட்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, வாழ்க்கையில் அதிக அனுபவங்களை நாம் படித்திருக்கிறோம் என்பதைத்தான்.
#- நாட்டுக்கோ கட்சிக்கோ தீங்கு செய்ய யாருக்கும் நான் அனுமதிக்க மாட்டேன்.
#- பாதையில் பயணிப்பதற்கு முன்னர் பயணத்தோழர்கள் முக்கியம். என்னுடன் பயணித்த தோழர்களில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஏ கே பி கட்சியின் தலைமைப்பதவியை இழப்பது பயணத் தோழரை இழப்பதை விட மிக இலகுவானது. ஜனாதிபதி அர்துகானுடனான எனது உறவில் சந்தேகம் கொள்வதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.
#- நாட்டு நலன் அல்லது கட்சி நலனைவிட எனது நலனை ஒருபோதும் நான் மேலாகக் கருத மாட்டேன்.
#- ஏ கே பி கட்சியின் பெறுமானங்களில் கொள்கைகளில் கைவைக்க யாருக்கும் நான் அனுமதிக்க மாட்டேன்.
#- ஏ.கே.பி கட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு எதிராக நான் முன்னணியில் இருப்பேன்.
#- ஏ.கே.பி கட்சியில் ஒரு தொண்டராக பணிபுரிவதிலிருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன்.
#- எந்தவகையிலும் பிளவுபட வேண்டாம் என ஏ.கே.பி கட்சித் தோழர்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.
#- உங்களின் எந்த ஒருவரின் உரிமையிலாவது நான் தவறுவிட்டிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.
#- இப்புவியியல் பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து மக்களுக்களினதும் உரிமைகளை நாம் பேணிப் பாதுகாப்போம்.
#- கட்சியில் இளைஞர் சபைக்கு அதிக கவனத்தை கொடுப்பது எமது கடமையாகும். அவர்கள்தான் கட்சியினதும் நாட்டினதும் எதிர்காலம்.
#- “அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் மிகைக்க முடியாது” என முன்பு கூறினேன். “அல்லாஹ் மீது நம்பிக்கை (தவக்குள்) வைக்கிறேன் என இன்று சொல்கிறேன்.

6 comments:

  1. where are our islamic leaders???????? POOOOHHHHHHHHH.....

    ReplyDelete
  2. As we are not living inTurkey, we heard lots of good about president and Priminister. Only Allah can bring about a good about a person. They try to do there best according to there ability. Allah put good about them in the hart of people.
    I heard in Turkey 24/7 Qur'an Bering reciter, non stop Qur'an being recited with out a break.
    Allah will help them to come out there current issue. Allah is ever living.

    ReplyDelete
  3. What a sadness situation?Yah Allah! Make them in unity.

    ReplyDelete
  4. Ninka.eppadiye.usupperththi.manisa.kollurenkada.turky.nadakkira
    Turky.nattukkaran.parppan.ninka.unkada.velaiya.parunkada.ninkal.srilankavil.erunthu.kondu.thevaiellamal.usuppwrththi.mànisana.kondukonde.erukkirinkal

    ReplyDelete
  5. யா அல்லாஹ், உண்மையாகவே தற்போதைய உலகில் இருந்த குறைந்தது 1% மாவது எதிர்காலத்தில் உன் நாட்டத்தினால் இஸ்லாத்திற்கு நல்ல ஒரு எதிர்காலம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு துருக்கிய அரசியல் முன்மாதிரியில் இருந்து தென்பட்டது.

    ஆனால் எமது சாதாரண கண்ணுக்கு தற்போது அங்கு நிகழும் இந்த நிலையில் உள்ள சாதக, பாதக நிலையினை நிகழ்த்துபவன் நீயே, அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி செய்த்தானிய எண்ணங்களை விட்டும் அவர்களைக் காப்பாயாக, முஸ்லிம் உம்மாவுக்கு ஒரு சிறந்த பொது தலைமைத் துவத்தை நீ நாடுபவர்களைக் கொண்டு உருவாக்குவாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அந்த முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தக்வா எனும் (அல்லாஹ்வுக்காக மட்டும்) தூய எண்ணத்துடன் செயற்படும் பக்குவத்தை வழங்குவதோடு எமக்கும் அந்த நர்பாக்கியத்தில் பங்குகொள்ள அருள்புரிவாயாக.

    ReplyDelete
  6. No question they are good leaders for Turkey people, If they also keep beard on face.. They will also be good leaders for Muslims around the world.

    ReplyDelete

Powered by Blogger.