Header Ads



வாகனங்களின் விலை, உயர்விலும் அரசியலா..?

ஜனாதிபதியை நெருக்கடிக்குள் சிக்க வைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் மஹஜன எக்சத் பெரமுனவின் ஊடகப் பேச்சாளருமான சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானில் இருந்த போது ஜப்பான் வாகனங்களின் விலைகளை அரசாங்கம் உயர்த்தியது.

இதன் மூலம் ஜனாதிபதியை நெருக்கடிக்குள் ஆழ்த்த அரசாங்கம் முயற்சித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் வேண்டுமென்றே திட்டமிட்டு இவ்வாறு ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு இடைநடுவில் ஜப்பான் வாகனங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

ஜனாதிபதி ஜப்பான் வர்த்தகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தருணத்தில், அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாத நல்லாட்சி அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளது.

கூட்டு அரசாங்கம் என்ற போதிலும் உண்மையில் யார் ஆட்சி நடத்துகின்றார்கள் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகின்றது.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் டொயட்டா பியஸ் ரக வாகனத்தின் விலை 75 லட்ச ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிடும்.

சுற்றுலாப் பயணிகளின் பயணக் கட்டணங்கள் இரட்டிப்பாக உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. Sundaikkaai Kal panam sumai kooli mukkaal panam.

    ReplyDelete

Powered by Blogger.