Header Ads



கல்விக் கல்லூரி ஆசிரியர்கள், சிறந்த முறையில் தமது கடமைகளைச் செய்கின்றனர் - பீடாதிபதி நவாஸ்


(எம்.ஜே.எம். சஜீத் )

இன்றைய கால கட்டத்தில் கல்விக்கல்லூரிகளிலிருந்து வெளியாகின்ற ஆசிரியர்கள் மிகச் சிறந்த முறையில் தமது கடமைகளைச் செய்கின்றனர். இவர்கள் மூலமாக பல்வேறான மாணவர்கள் பயன் பெற்று பல்துறைகளில் பிரகாசித்து வருகின்றனர் என அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 2014/2016 ஆம் கல்வியாண்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு கல்வியற் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், கல்விக் கல்லூரிகளில் பயிற்றப்படும் ஆசிரியர்கள் பாடசாலைகளில் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றார்கள்  அவர்களுக்கென கல்விக் கல்லூரிகளில் சிறந்த பயிற்சி வழங்கப்படுகின்றன. இவ் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி போதிக்கின்ற நடைமுறை மிக சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இவர்கள் ஜனரஞ்சகமான ஆசிரியர்களாக திகழ்கின்றாரக்ள் என்றால் அது மிகையில்லை.

இவ்வாறான ஆசிரியர்களை மேலும் வளர்த்தெடுக்க வேண்டியதும் அவர்களுக்கு சிறந்த தகைமைகளை அளிக்க வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது.
சிறந்த கல்விக் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றபோது சிறந்த மாணவர் சமுதாயம் உருவாக கால்கோளாக அமைகின்றது. அதனால்தான் கல்விக ;கல்லூரிகளின்பால் எமது கவனத்தினை அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு கல்விக் கோட்டத்திலும் முற்று முழுதாக கல்விக் கல்லூரி ஆசிரியர்களை மட்டும் கொண்ட பாடசாலை ஒவ்வொன்றை உருவாக்கி அப்பாடசாலையினை மாதிரிப் பாடசாலையாக அறிமுகம் செய்து அதனை அப்பகுதியில் உள்ள ஏனைய பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் சென்று பார்வையிட்டு பயிலக்கூடிய பாடசாலைகளாக அவற்றை திகழ வைப்பதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அண்மையில் எமது கல்லூக்கு விஜயம் செய்த போது குறிப்பிட்டதற்கமைவாக கல்விக் கல்லூரிகளில் பயின்றுவரும் ஆசிரியர்களது நிலைமை விளங்கக் கூடியதாக அமைகின்றது.

No comments

Powered by Blogger.