Header Ads



எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் - கடைசியாக உறவினர்களுடன் சந்திப்பு


வங்காளதேச விடுதலைப் போரின்போது விடுதலைக்கு எதிராக செயல்பட்டவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மோஷியர் ரஹ்மான் நிஜாமி போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மனித படுகொலை, தீவைப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவரது மேல் முறையீட்டு மனு மற்றும் சீராய்பு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து தண்டனையை உறுதி செய்தது. இனி, அதிபரிடம் கருணை மனு அளித்து நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது.

அதேசமயம், அவரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டாக்கா மத்திய சிறைச்சாலையில் நிஜாமி தூக்கிலிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனை உறுதி செய்யும் வகையில், காசிம்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிஜாமியை அவரது உறவினர்கள் இன்று பார்த்துச் சென்றுள்ளனர். நிஜாமின் அவரது மனைவி, இரண்டு மகன்கள், மகள் உள்ளிட்ட 7 பேர் அவரை சந்தித்ததாக சிறை அதிகாரி தெரிவித்தார். சுமார் 40 நிமிடங்கள் வரை அவருடன் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். எனவே, நிஜாமி எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிகிறது.

1 comment:

  1. யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவர்களையே அதிகமதிகம் சோதிக்கிறான். அல்லாஹ்வின் தீன் ஒளி இவ்வுலகில் பிரகாசிப்பதை இறை நிராகரிப்பாளர்கள் தமது வாயால் ஊதி அணைத்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் வெறுத்த போதிலும் மீண்டும் இஸ்லாம் உலகிலுள்ள எல்லா வழிகேடுகளையும் பின்தள்ளி மேலோங்கியே தீரும். அல்லாஹ் தான் நாடுபவர்களைக் கொண்டு அதற்கு உதவுவான். இவர்கள் யாரை அளித்தபோதிலும் சரியே !

    ReplyDelete

Powered by Blogger.